வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

இந்தியாவில் வருட இறுதி பண்டிகை காலம் துவங்கிவிட்டது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கடந்துவிட்ட நிலையில், தீபாவளி, ஆயுத பூஜை, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்த அக்டோபர் மாதத்தில் வரவுள்ளன.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

பொதுவாக நமது இந்தியர்கள் மற்ற நாட்களை காட்டிலும் பண்டிக்கை நாளில் காரை டெலிவிரி எடுக்கவே விரும்புவர். இது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் கொரோனா இரண்டாவது அலையால் சரிந்த விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் சரிக்கட்ட தயாராகி வருகின்றன.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

மேலும் இந்த பண்டிகை காலத்திற்காக ஸ்கோடா, கியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில், இந்த பண்டிகை நாட்களில் வாங்குவதற்கு ஏற்ற எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

டாடா பஞ்ச்

மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படியோ தெரியவில்லை, ஆனால் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இந்தியர்களை பண்டிகை காலத்தில் கவர்வதில் எப்போதுமே தயாராக இருக்கும். இதன்படி டாடா பிராண்டில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி இந்த அக்டோபரில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

இந்த புதிய டாடா காருக்கான முன்பதிவுகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால் சில டீலர்ஷிப் மையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில், ரூ.21,000 என்கிற டோக்கன் தொகை உடன் முன்பதிவுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, டாடா பஞ்ச் எஸ்யூவியை முன்பதிவு செய்ய விருப்பப்படுபவர்கள் அருகில் உள்ள டாடா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

மஹிந்திரா எக்ஸ்யூவி700

5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கொண்டுவரப்படும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 அடுத்த அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 5-இருக்கை வெர்சனுக்கான விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

எம்.எக்ஸ், ஏஎக்ஸ்3, ஏஎக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ்7 என்ற நான்கு விதமான ட்ரிம்களில், மொத்தம் 34 வேரியண்ட்களில் புதிய எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை வெர்சனாக கொண்டுவரப்படும் இந்த எஸ்யூவி வாகனத்தில் 2.2 லிட்டர் டர்போ டீசல் & 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

எம்ஜி அஸ்டர்

அஸ்டர், இந்த 2021ஆம் வருடத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும் மிக முக்கியமான எஸ்யூவி கார். இந்த புதிய எம்ஜி காரின் அறிமுக தேதியோ, அல்லது முன்பதிவு துவங்கவுள்ள தேதியோ தற்போது வரையில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த எஸ்யூவி காரின் அறிமுகத்தை வருகிற அக்டோபரில் எதிர்பார்க்கிறோம்.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி என்கிற ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட உள்ள எம்ஜி அஸ்டரை 5 விதமான நிறத்தேர்வுகளில், இரு பெட்ரோல் & 1 டீசல் என்ஜின் தேர்வுகளில் வாங்கலாம். இந்த எம்ஜி எஸ்யூவி காரில் மிக முக்கிய அம்சமாக நிலை-2 தானியங்கி ஓட்டுனர் உதவி தொழிற்நுட்பங்கள் அதன் பிரிவிலேயே முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

புதிய ஃபோர்ஸ் குர்கா

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய தலைமுறை குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை இந்திய சந்தையில் வெளியீடு செய்திருந்தது. மஹிந்திரா தார் வாகனத்திற்கு போட்டியாக வரும் இதன் விலைகள் இந்த செப்டம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், டெலிவிரிகள் 2021 அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளன.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

மேம்படுத்த ஸ்டைலில், கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஃபோர்ஸ் குர்காவில் பிஎஸ்6-க்கு இணக்கமான 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 91 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட உள்ளது.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

ஃபோக்ஸ்வேகன் டைகுன்

ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து டைகுன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது. ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் இதுவரை 10,000-ஐ கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!

1.0 லிட்டர், 3-சிலிண்டர் டிஎஸ்ஐ (113 பிஎச்பி/ 175 என்எம்), 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ (148 பிஎச்பி/ 250 என்எம்) என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஃபோக்ஸ்வேகன் டைகுனில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் & 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் (1.5 லிட்டர் என்ஜின் உடன் மட்டும்) என்ற 3 டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

Most Read Articles

English summary
5 New SUVs To Buy This Festive Season.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X