டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

டாடா மோட்டார்ஸின் அடுத்த அறிமுக மாடலான ஹார்ன்பில் (எச்பிஎக்ஸ்) காரின் உட்புற தோற்றம் சமீபத்திய ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த ஸ்பை படங்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு மினி-எஸ்யூவி காரை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

தற்போதைக்கு எச்பிஎக்ஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் டாடா மோட்டார்ஸின் இந்த மைக்ரோ எஸ்யூவி கார் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக பல்வேறு விதமான சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

அப்போதெல்லாம் காரின் ஸ்பை படங்கள் நமக்கு கிடைப்பது வழக்கம். இந்த வகையில் தற்போது காடிவாடி செய்திதளம் மூலமாக புதியதாக கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் இந்த டாடா காரின் உட்புறத்தை பார்க்க முடிகிறது.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

இந்த குறிப்பிட்ட எச்பிஎக்ஸ் சோதனை கார் அதன் மத்திய-நிலை வேரியண்ட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காரில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு மாற்றாக 2-டின் மியுசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

ஆடியோ சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஜன்னல்களிலும் பவர் கண்ணாடிகள் உள்ளன. முன் மற்றும் பின் இருக்கை பயணிகள் கைகளை ஓய்விற்காக வைக்க ஆர்ம்ரெஸ்ட் எதுவும் இல்லை.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

ஏசி துளைகளில் பியானோ கருப்பு நிறத்திலான தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது. அதேபோல் கதவுகளின் உட்புற கைப்பிடிகளும் பியானோ கருப்பு நிறத்தில் உள்ளன.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

பின்பக்க இருக்கைகளில் தலையணைகளை அட்ஜெஸ்ட் செய்ய முடியவில்லை. ஆனால் அதற்கும் பின்புறத்தில், பொருட்களை வைக்கும் பகுதியில் பார்சல் அலமாரி வழங்கப்படலாம். மற்றப்படி இந்த மைக்ரோ-எஸ்யூவி காரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுமா என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய எச்பிஎக்ஸ் மாடலில் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் கார்களில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை தான் டாடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் அடுத்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்...

அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படலாம். இந்த என்ஜின் உடன் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வையும் இந்த வருங்கால மைக்ரோ-எஸ்யூவி காரில் டாடா வழங்குவதற்கு சிறிய வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Upcoming Tata Hornbill (HBX) Interior Design Revealed In Spy Pictures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X