Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழைய வாகனங்களை பயன்படுத்துவது இனி ரொம்ப கஷ்டம்போல... புதிய வாகன அழிப்பு கொள்கையால் செலவீனம் அதிகமாகிறது!!
புதிய வாகன அழிப்பு கொள்கையால் பழைய வாகனங்களைப் பயன்படுத்துவது அதிக செலவீனத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக மாற இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் காணலாம்.

காற்றை மாசுபடுத்துவதில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் பங்கு பெருமளவில் காணப்படுகின்றது. இதனைக் காரணம் காட்டி வாகனங்கள் சார்ந்த விவகாரத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போதைய மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், கடந்த ஆண்டு பிஎஸ்6 எனும் புதிய மாசு உமிழ்வு விதியினை நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மின் வாகன ஊக்குவிப்பு முயற்சிகளிலும் அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே நடப்பு 2021 மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்களை ஸ்கிராப் (அழிக்கும்) செய்யும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

பழைய வாகனங்களினாலேயே பெருமளவிலான மாசு உமிழ்வும், விபத்துகளும் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவேதான் பழைய வாகனங்களுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு போர் கொடியை தூக்கியிருக்கின்றது. இதனால், 15 ஆண்டுகள் பழைய வாகனங்களைப் பயன்படுத்துவது மிக அதிக செலவீனத்தை வழங்கக் கூடிய ஒன்றாக மாற இருக்கின்றது.

அதாவது, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவோர்க்கு உச்சபட்ச வரி விதிக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக, வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு அதிகபட்சமாக 62 மடங்கு வரை உயர்த்தப்பட்ட கட்டணத்தை எஃப்சி-இன் போதும், தனி நபர் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிக்கும்போது எட்டு மடங்கு வரை அதிகமாகவும் வசூலிக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இதுதவிர, வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் சாலை வரியுடன் சேர்த்து கூடுதலாக பசுமை வரியையும் மாநிலங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும். இதற்கான புதிய அறிவிப்பாணையையே மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்பு வெளியானபின் 8 ஆண்டுகள் பழைய வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பதிவு செய்வது, ஃபிட்னஸ் சான்று பெறுவது கட்டாயமாகிவிடும். மேலும், வழக்கமான வருடாந்திர சாலை வரியைக் காட்டிலும் கூடுதலாக 10 முதல் 25 சதவீதம் வரை பசுமை வரியையும் செலுத்த வேண்டியிருக்கும். இது வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதேபோல், தனி நபர் பயன்பாட்டில் இருக்கும் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களின் மறு பதிவு கட்டணமும் பல மடங்கு உயர இருக்கின்றது. இதன்படி, தற்போது மறு பதிவிற்காக வசூலிக்கப்படும் கட்டணம் ரூ. 300இல் இருந்து ஆயிரமாக உயர இருக்கின்றது. இது பழைய இரண்டு சக்கர வாகனத்திற்கான கட்டணம் ஆகும்.

இதேபோல் கார்களுக்காக வசூல் செய்யப்பட்டு வரும் மறு பதிவு கட்டணம் ரூ. 600 இல் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயரலாம் என கூறப்படுகின்றது. இந்த கட்டணங்களையே மாநில அரசுகள் பசுமை வரியாக, சாலை வரியுடன் கூடுதலாக வசூலிக்க இருக்கின்றன. இதுதவிர, மறுபதிவு மற்றும் ஃபிட்னஸ் சான்றின்போது தீவிர ஆய்விற்கு பழைய வாகனங்கள் உட்படுத்தப்பட இருக்கின்றன.

அப்போது, வாகனங்கள் சிறப்பாக செயல்பட தவறினால் உடனடியாக அதன் பதிவு ரத்து போன்ற நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்காக தானியங்கி வாகன பரிசோதனை மையங்கள் நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் தயார்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. மேலும், வாகனங்களை ஸ்கிராப் செய்யவும் நவீன மையங்களையும் உருவாக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

தாமாக முன் வந்து பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வோர்க்கு சில சிறப்பு சலுகைகளை வழங்கவும் மத்திய அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விரிவான அறிவிப்பே மிக விரைவில் வெளியாக இருக்கின்றது. அதில், பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வது மற்றும் வயதான வாகனங்களுக்கு அதிக வரி விதிப்பு என பல்வேறு புதிய தகவல்கள் இடம்பெற இருக்கின்றன.