விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

ஆடி (Audi) நிறுவனத்தின் அண்மை அறிமுகங்களான இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஜிடி ஆகிய இரு கார் மாடல்களில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி (Audi), இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் நாட்டில் மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அனைத்தும் மிக அதிக விலைக் கொண்ட ஆடம்பர ரக வாகனங்களாகும். ஆடி இ-ட்ரான் 50 (Audi e-tron 50), ஆடி இ-ட்ரான் 55 (Audi e-tron 55) மற்றும் ஆடி இ-ட்ரான் ஜிடி (Audi e-tron GT) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

இவை அனைத்தும் நடப்பு 2021ம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொன்றும் தனித்துவமான பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், இரு வெவ்வேறு மாடல்களிலேயே பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி காட்சி தந்திருக்கின்றார்.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், புத்தம் புதிய ஆடி எலெக்ட்ரிக் கார்கள் கோலியின் வீட்டில் இருந்து வெளியே வருவதைப் போன்றும், அதில் விராட் பயணிப்பதைப் போன்ற வீடியோ காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

ஆடி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிரடராக விராட் கோலி நெடு-நீண்ட காலமாக இருந்து வருகின்றார். இதன் அடிப்படையிலேயே அவரது பயன்பாட்டிற்கு இச்சொகுசு மின்சார கார்களை நிறுவனம் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு ஆடி மின்சார கார்களும், ஸ்கோடா ஆடி ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவெண் கொண்டு ஆய்வு செய்ததில் இதுகுறித்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. ஆடி நிறுவனத்தின் தாய் நிறுவனமாக கருதப்படும் இவை பிராண்ட் அம்பாசிடரான கோலிக்கு இக்காரை கொடுத்து அழகு பார்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், இரு கார்களிலும் அவர் பல முறை காட்சியளித்திருப்பதால் இ-கார்களை ஆடி நிறுவனம் வழங்கியிருக்கும் உறுதி வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களிலும் இதேபோன்று நிறுவனம் புதிய கார்களை பரிசாக வழங்கியிருக்கின்றது.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

இதன் அடிப்படையிலும் புதிய கார்கள் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. ஆடி இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஜிடி ஆகிய மின்சார கார் மாடல்களே விராட்டின் பயன்பாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இரண்டும் மிக சிறந்த எலெக்ட்ரிக் கார்களாக இந்தியாவில் விளங்குகின்றன.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

நீல நிறத்தில் இருப்பது ஆடி இ-ட்ரான் மாடலாகும். இக்கார் இந்தியாவில் 1.01 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பது இ-ட்ரான் ஜிடி மாடலாகும். இது ஓர் நான்கு கதவுகள் கொண்ட கூபே ரக மின்சார காராகும். இது அதிக திறன் வெளிப்பாடுக் கொண்டது.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

இந்தியாவில் ரூ. 1.80 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இரு விதமான தேர்வுகளில் இந்த மின்சார காரை ஆடி விற்பனைக்கு வழங்கி வருகின்றது. எஸ் மற்றும் ஆர்எஸ் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும். எஸ் வேரியண்ட் 523 பிஎச்பி - 630 என்எம் டார்க் மற்றும் 388 கிமீ ரேஞ்ஜ் ஆகியவற்றை வழங்கும் திறன் கொண்டது.

விலை உயர்ந்த Audi மின்சார கார்களில் காட்சி தந்த விராட் கோலி... இந்த கார்கள் இப்போதான் விற்பனைக்கு வந்துச்சு!

இதன் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி வேரியண்ட் 637 பிஎச்பி பவர் - 830 என்எம் டார்க் மற்றும் 500 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட மின்சார கார்களிலேயே விராட் கோலி தற்போது தென்பட்டிருக்கின்றார். இரு எலெக்ட்ரிக் கார்களுக்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Virat kohli gets brand new audi e tron and e tron gt electric cars
Story first published: Thursday, December 23, 2021, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X