யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இக்கார் குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் லம்போர்கினி. இந்நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்று கல்லர்டோ ஸ்பைடர். இந்த விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் ஒரு சில நபர்களே பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவராக இருந்தவரே நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

இவர் பயன்படுத்தி வந்த கல்லர்டோ ஸ்பைடர் சூப்பர் காரே தற்போது பயன்படுத்திய கார்கள் சந்தையில் (செகண்ட் ஹேண்ட் வாகனமாக) விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லம்போர்கினி நிறுவனம் கல்லர்டோ காரை 2003ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

விராட் கோலி பயன்படுத்தி வந்தது 2013 மாடல் ஆகும். இது ஓர் கன்வர்டபிள் சூப்பர் கார். அதாவது, தேவைப்பட்டால் மேற்கூரை கொண்ட காராகவும், தேவையில்லாத நேரங்களில் மேற்கூரையை நீக்கும் வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் இரு இருக்கை வசதியை மட்டுமே இக்கார் கொண்டிருக்கின்றது. இவ்விரு இருக்கையும் அதிக சொகுசான மற்றும் மிருதுவானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. நீண்ட தூர பயணங்களைக் கூட சற்றும் கலைப்பில்லாத பயணமாக மாற்ற இவ்விருக்கை உதவும்.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

இதுதவிர, இரட்டை க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பவர் விண்டோவிற்கான டாக்கில் ஸ்விட்சுகள் என எக்கசக்க பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சூப்பர் காரையே விராட் கோலி மிக சமீபத்தில் செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்றிருக்கின்றார். தற்போது அக்கார் மீண்டும் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

ராயல் டிரைவ்.இன் தளம் வாயிலாக இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. தளத்தை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும். லம்போர்கினி நிறுவனம் கல்லர்டோ ஸ்பைடர் காரில் 5.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யூஸ்டு கார் சந்தையில் விற்பனைக்கு வந்த விராட்டின் விலையுயர்ந்த கார்... இந்த காரோட விலை எவ்ளோ தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

இது அதிகபட்சமாக 550 பிஎச்பியையும், 540 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனில் இணைந்து செயல்படுகின்றது. இந்தியாவில் லம்போர்கினி கல்லர்டோ ஸ்பைடர் சூப்பர் கார் ரூ. 3.36 கோடி எனும் விலையில் விற்கப்பட்டது.

Image Courtesy: Najeeb Rehman KP

தற்போது, விராட் கோலி பயன்படுத்திய கார் ரூ. 1.35 கோடி என்ற விலையில் செகண்ட் ஹேண்ட் கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. சற்றும் புது பொலிவு குறையாமல் இக்கார் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Virat Kohli Owned Lamborghini Gallardo Spyder Available For Sale. Read In Tamil.
Story first published: Wednesday, May 5, 2021, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X