புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் புத்தாண்டு முதல் கார்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. ஆம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தவுள்ளது.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ, வெண்ட்டோ மற்றும் டைகுன் (Taigun) ஆகிய கார்களின் விலைகள் உயரவுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை 2 முதல் 5 சதவீதம் வரை உயரவுள்ளது. கார் மாடல்கள் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து, இந்த விலை உயர்வு வேறுபடும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக, இந்த விலை உயர்வு டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் (Tiguan Facelift) காருக்கு பொருந்தாது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கூறியுள்ளது.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் காரின் ஃபேஸ்லிஃப்ட் காரை வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் புத்தாண்டு முதல் பல்வேறு நிறுவனங்களின் கார்களின் விலை உயரவுள்ளது. இதில், மாருதி சுஸுகி, டொயோட்டா, டாடா, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே கார்களின் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கார் நிறுவனங்களால் டெலிவரி கொடுக்க முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இந்த நேரத்தில் கார்களின் விலையும் உயரவுள்ளது. நடப்பாண்டு தொடக்கம் முதலே கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக கார்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டிலும் கார்களின் விலை உயரவுள்ளது. கார்கள் மட்டுமல்லாது, இரு சக்கர வாகனங்களின் விலையும் அடுத்த ஆண்டு உயரவுள்ளது.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இதில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை வரும் ஜனவரி 4ம் தேதி முதல் உயரவுள்ளது. இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு முதல் அமல்... ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயர்கிறது... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை ஏற்கனவே தடுமாறி வரும் நிலையில் வாகனங்களின் விலை உயர்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த விலை உயர்வு வாகனங்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 23, 2021, 23:40 [IST]
English summary
Volkswagen india to hike car prices from january 1 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+