நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) எஸ்யூவி கார் மாடல் நாளை இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), நிறுவனத்தின் டிகுவான் (Tiguan) எஸ்யூவியும் ஒன்று. இந்த கார் மாடலே நாளை நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இது ஓர் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும்.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு புதிய அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. மிக சமீபத்தில்தான் இக்காரின் உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கின.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

நிறுவனத்திற்கு சொந்தமான அவுரங்காபாத் ஆலையில் இப்பணிகள் மிகவும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் டிகுவான் எஸ்யூவி காரில் குறிப்பிட்ட சில அம்சங்கள் மறு வடிவமைப்புச் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

அந்தவகையில், காரில் இடம் பெற்றிருந்த எல்இடி மின் விளக்கு மறு வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது. பகல்நேர மின் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப் நாளை அறிமுகமாக இருக்கும் டிகுவானில் பயனப்டுத்தப்பட்டுள்ளது. இத்துடன், புதிய அகலமான முன் பக்க க்ரில், முன் பக்க பம்பர், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்டுகள், புதிய அலாய் வீல்கள் மற்றும் ட்வீக்கட் எல்இடி டெயில் லேம்ப்புகள் உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்ட டிகுவான் எஸ்யூவி காரில் இடம் பெற்றிருக்கின்றன.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

வெளிப்புறத்தைப் போல காரின் உட்புறத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய வியன்னா லெதர் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை, மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல், ஆம்பிசியன்ட் மின் விளக்கு (30 ஷேட்டுகள்) மற்றும் இலுமினேட்டட் கியர் ஸ்டால்க் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரின் உட்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

ஃபோக்ஸ்வேகன் டிகுவன் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தானியங்கி டிரான்ஸ்மிஷன் வழக்கமான அம்சமாக இக்காரில் வழங்கப்படுகின்றது.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

இத்துடன், 4 மோஷன் அனைத்து வீல் இயங்கும் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. டிகுவன் எஸ்யூவி இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகிய கார் மாடல்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan! உற்பத்தி பணி எல்லாம் எப்பவோ தொடங்கிடுச்சு!

இத்தகைய கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் நாளை நம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த பிரீமியம் தர கார் மீது பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் நாளைய தினம் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. விலை மற்றும் இன்னும் பிற முக்கிய தகவல்கள் நாளைய தினமே வெளியிடப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, December 6, 2021, 18:13 [IST]
English summary
Volkswagen launching facelifted tiguan suv tomorrow in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+