ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் அறிமுகம் மேலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பண்டிகை கால அறிமுகப் பட்டியலில் இந்த கார் வந்துவிடும் என்று தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் எக்கச்சக்க வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய மாடலை ஃபோக்ஸ்வேகன் களமிறக்க உள்ளது. டைகுன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தம் புதிய மாடல் டிசைனிலும், சிறப்பம்சங்களிலும் சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

இந்த சூழலில், கொரோனா காரணமாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. வரும் ஜூன் அல்லது ஜூலையில் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில்தான் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வருகிறது. அதாவது, கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று குறையும் என்பதுடன், பண்டிகை காலத்திற்கு முன்னதாக கொண்டு வருவதற்கான திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு நேர் போட்டியாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற இந்தியாவுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை உதிரிபாகங்கள் இந்தியாவில் இருந்தே பெறப்படுவதால், இந்த எஸ்யூவி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி 2,651 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். இந்த கார் 5 சீட்டர் மாடலாக வருவதால், அதிக இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் ஆப்ஷனலாக 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

தகவல் உதவி - கார்டாக்

More from DriveSpark

Article Published On: Friday, May 28, 2021, 14:01 [IST]
English summary
According to reports, Volkswagen is planning to launch all new Taigun SUV in India by August.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+