Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார்களுக்கு, ஃபோக்ஸ்வேகன் டைகுன் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுடனும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிடும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் 5 சீட்டர் கார் ஆகும். இதன் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. எனவே டெலிவரி பணிகளும் உடனடியாக தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா குஷாக் காருடன், ஃபோக்ஸ்வேகன் டைகுன் நிறைய அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. அத்துடன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவுள்ள முதல் தயாரிப்பு டைகுன் கார்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா குஷாக் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில், 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் மொத்தம் மூன்று கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் ஸ்டாண்டர்டாக 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 1.0 லிட்டர் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. 1.5 லிட்டர் இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. மேலும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெற்றுள்ளது.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

அத்துடன் டாப் வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் உடன் ஸ்டியரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் நீளம் 4,221 மிமீ, அகலம் 1,760 மிமீ, உயரம் 1,612 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,651 மிமீ. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 188 மிமீ. 17 இன்ச் வீல்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் பூட் ஸ்பேஸ் 385 லிட்டர்கள் ஆகும்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 4ever Program என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 ஆண்டுகள் வாரண்டி மற்றும் குறைவான விலையில் உதிரி பாகங்கள் ஆகியவை அடங்கும். மேலும் பெட்ரோல் இன்ஜின்களுக்கான ஆயில் விலையையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 30 சதவீதம் வரை குறைத்துள்ளது.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இதன் விளைவாக ஒட்டுமொத்த சர்வீஸ் செலவு சுமார் 15-20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பாகவே நிறைய பேர் இந்த காரை முன்பதிவு செய்துள்ளனர்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

இதன்படி டைகுன் காருக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது வரை 12,221 முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கு எவ்வளவு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது? என்பதை இந்த எண்கள் நமக்கு உணர்த்துகின்றன. தற்போது சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் முன்பதிவு எண்ணிக்கை இன்னும் நன்றாக உயரலாம்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைபோல், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான சர்வீஸ் செலவு குறைவுதான். 1.0 லிட்டர் வேரியண்ட்டிற்கான சர்வீஸ் செலவு ஒரு கிலோ மீட்டருக்கு 37 பைசா ஆகும். அதே நேரத்தில் 1.5 லிட்டர் வேரியண்ட்டிற்கான சர்வீஸ் செலவு ஒரு கிலோ மீட்டருக்கு 40 பைசா ஆகும். எனவே பராமரிப்பு செலவு விஷயத்திலும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் லைன் என மொத்தம் 2 வேரியண்ட் லைன்-அப்களில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் விற்பனை செய்யப்படும். இதில், டைனமிக் லைனில், கம்ஃபோர்ட் லைன், ஹை-லைன் மற்றும் டாப்-லைன் ஆகிய வேரியண்ட்கள் அடங்குகின்றன. இந்த வேரியண்ட்களில், 1.0 லிட்டர் இன்ஜின் தேர்வு வழங்கப்படும்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் பெர்ஃபார்மென்ஸ் லைனில், ஜிடி மற்றும் ஜிடி ப்ளஸ் ஆகிய வேரியண்ட்கள் வருகின்றன. இந்த வேரியண்ட்களில், 1.5 லிட்டர் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஆரம்ப விலை 10,49,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17,49,900 ரூபாய் ஆகும். வேரியண்ட்கள் வாரியான விலையை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

Hyundai Creta-விற்கு சவால்... சூப்பரான விலையில் Volkswagen Taigun கார் விற்பனைக்கு அறிமுகம்! எவ்ளோனு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருந்து 2 புதிய கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்திய சந்தையில் 2 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக இன்று நடைபெற்ற டைகுன் அறிமுக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. அந்த 2 புதிய கார்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
English summary
Volkswagen taigun suv launched in india here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X