வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

வால்வோ எஸ்90 செடான் காரின் பெயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

வால்வோ நிறுவனத்தில் இருந்து கடைசியாக எஸ்60 செடான் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது ஒன்று தான் தற்போதைக்கு செடான் காராக வால்வோவின் இணையத்தள பக்கத்தில் உள்ளது.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

முன்பு எஸ்60 காருடன் இருந்த எஸ்90 செடான் காரின் பெயர் வால்வோ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

வால்வோ எஸ்90 முதன்முதலாக 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது ஒரே ஒரு இன்ஸ்க்ரிப்ஷன் என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

அதன் பின் 2018ல் தான் மொமண்டம் வேரியண்ட் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தற்போது வரையில் வால்வோ எஸ்90 இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்ட்டில் மட்டுமே டீலர்ஷிப் மையங்களில் கிடைத்து வருகிறது.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

இந்த வேரியண்ட் ஒனிக்ஸ் ப்ளாக் மெட்டாலிக், முசெல் ப்ளூ மெட்டாலிக் மற்றும் க்ரிஸ்டல் வெள்ளை பேர்ல் என்ற மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. எஸ்90 செடான் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.58.96 லட்சமாக உள்ளது.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

விற்பனையில் இந்த வால்வோ செடான் காருக்கு போட்டியாக உள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் உள்ளன. புதிய எஸ்60 செடான் காரின் ஆரம்ப விலை ரூ.45.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

வால்வோ எஸ்90 காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மட்டுமின்றி, ஆடி ஏ6, மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் மற்றும் ஜாகுவார் எஸ்.எஃப் உள்ளிட்டவையும் வால்வோவின் எஸ்90 செடான் காருக்கு விற்பனையில் போட்டியாக உள்ளன.

வால்வோ எஸ்90 செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறதா? வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!!

வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால் இந்த காரின் விற்பனை இந்தியாவில் சிறிது சிறிதாக நிறுத்தி கொள்ளப்படும் என கூறப்படுகிறது. உடனுக்குடனான தகவல்களுக்கு தொடர்ந்து ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைப்பில் இருங்கள்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo S90 sedan removed from website. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X