இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இந்திய அறிமுகம் தள்ளி போயுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதை வால்வோ நிறுவனம் தற்போது தள்ளிபோட்டுள்ளது. இதற்கு உலக அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையே காரணம். இந்த பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் அறிமுகம் மட்டுமல்லாது, அந்த காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது. முன்னதாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் இந்தியாவில் நடப்பு 2021ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் உலக அளவில் செமி கண்டக்டர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறை, எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் அறிமுகத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தை வால்வோ நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு சர்வதே சந்தைகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

தனது கார்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் உத்வேகத்தை இது வால்வோ நிறுவனத்திற்கு அளித்துள்ளது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு வால்வோ நிறுவனம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில், இந்திய சந்தையில் 4 புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என வால்வோ நிறுவனம் கூறியது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் இந்த அறிமுக திட்டங்களை தாமதம் செய்தாக வேண்டிய சூழ்நிலையை தற்போதைய கோவிட்-19 பிரச்னை வால்வோ நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. தனது அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதன் மூலம் எதிர்கால எலெக்ட்ரிக் மயமாக்கலுக்கு பங்களிப்பு செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

இதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் வால்வோ நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பொறுத்தவரை, இந்த கார் புதிய சிஎம்ஏ (Compact Modular Architecture - CMA) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட வால்வோ எக்ஸ்சி40 காரும், எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளன. இருப்பினும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், இரண்டு 150 kW எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

அத்துடன் 78 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பையும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த கார் 402 பிஎச்பி பவரையும், 659 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் ஸ்டாண்டர்டு எக்ஸ்சி40 கார், தனது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் 187 பிஎச்பி பவரை உருவாக்குகிறது. ஸ்டாண்டர்டு மாடலை காட்டிலும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் எடை 500 கிலோ அதிகம்.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

அதிக எடை கொண்டதாக இருந்தாலும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

இது சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் மூலம் இந்த காரின் பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். அதே சமயம் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

இந்த காரின் உட்புறத்தில் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 12.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 2-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளையும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது.

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தள்ளி போனது... காரணம் என்னனு தெரியுமா?

பொதுவாக வால்வோ கார்கள் அனைத்தும் பாதுகாப்பு வசதிகளில் தலைசிறந்து விளங்கும். எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் அதற்கு விதிவிலக்கு கிடையாது. இந்த காரில் 8 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்களையும் வால்வோ நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo xc40 recharge india launch postponed here is the reason why
Story first published: Sunday, August 8, 2021, 8:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X