ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் அம்சங்கள் குறித்து சில முக்கிய விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் புதிய டைகுன் கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியும் ஒரே கட்டமைப்புக் கொள்கையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

இதனால், தோற்றத்தில் வேறுபட்டாலும், எஞ்சின் உள்ளிட்டவற்றை இரண்டு கார்களும் பகிர்ந்து கொள்ளும். அதன் அடிப்படையில், ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள்தான் டைகுன் எஸ்யூவியிலும் வழங்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

அடுத்து 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

மேலும், குஷாக் எஸ்யூவியில் வழங்கப்படுவது போலவே, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை இடம்பெறும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

மேலும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்படும். டைகுன் எஸ்யூவியில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்து புதிய தகவல்கள்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 20, 2021, 18:15 [IST]
English summary
Here are the some important features and technical things expected from All New Volkswagen Taigun SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+