Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

பெட்ரோல் & டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். இதற்கு அடுத்ததடுத்ததாக அறிமுகமாகி கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களே சாட்சியாகும்.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

கடந்த சில வருடங்களில் மட்டும் ஏகப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான Tata Motors அதன் புதிய Tigor EV காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் செடான் காராக விளங்கும் புதிய Tigor EV, Tata நிறுவனம் அறிமுகப்படுத்தும் இரண்டாவது மின்சார வாகனமாகும். முன்னதாக Nexon EV-ஐ தனது முதல் எலக்ட்ரிக் வாகனமாக இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த இரு Tata எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான வித்தியாசங்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

தோற்றம்

தற்சமயம் எஸ்யூவி கார்களின் காலம் என்பதால், Tigor உடன் ஒப்பிடுகையில், Nexon உங்களது கண்களுக்கு அழகாக தெரிவதில் எந்த தவறு இல்லை. ஆனால் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் வழக்கமான ஹலோஜன் பல்புகளே வழங்கப்படுபவதை மறந்துவிடாதீர்கள்.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

உட்பக்க தோற்றத்தில் எரிபொருள் Nexon காருக்கும், அதன் எலக்ட்ரிக் வெர்சனுக்குm இடையில் பெரியதாக எந்த வித்தியாசமில்லை (கியர் லிவர் மட்டும் இல்லை). Nexon-ஐ போன்று Tigor EV-யும் பெரும்பான்மையான வெளிப்பக்க பாகங்களை அதன் பெட்ரோல் மாடலில் இருந்தே பெற்றுள்ளது.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

ஆனால் எலக்ட்ரிக் கார்கள் என்பதை குறிக்கும் விதத்தில் Nexon EV, Tigor EV இரண்டும் நீல நிற தொடுதல்களை சுற்றிலும் கொண்டுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tigor EV-யில் புதிய அலாய் சக்கரங்கள், புதிய மூடப்பட்ட க்ரில் மற்றும் ஜிப்ட்ரான் முத்திரை வழங்கப்பட்டுள்ளன.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

பரிணாம அளவுகள்

Tigor EV Nexon EV
Length 3993mm 3993mm
Width 1677mm 1811mm
Height 1532mm 1606mm
Wheelbase 2450mm 2498mm
Boot Space 316 litres 350 litres

இந்த அட்டவணையை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் பரிணாம அளவுகளில் இரண்டிற்கும் இடையில் எந்த அளவிற்கு வேறுப்பாடுகள் உள்ளன என்பது. இந்த இரு Tata எலக்ட்ரிக் கார்களும் ஒரே அளவிலான நீளத்திலேயே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் Nexon எஸ்யூவி ரக கார் என்பதால், அதன் உயரம் அதிகமாகும்.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

அதேபோல் அகலத்திலும் Nexon, Tigor-ஐ முந்துகிறது. இவற்றை வைத்து பார்த்தோமேயானால், Tigor-ஐ காட்டிலும் Nexon காரை நன்கு பருமனான தோற்றத்தில் Tata நிறுவனம் வழங்குவது தெளிவாகிறது. முன் மற்றும் பின்சக்கரங்களுக்கு இடையேயான தூரம் இவை இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

இதனால் உட்புற கேபினில் இட வசதி இந்த இரு எலக்ட்ரிக் காரிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பகுதி Nexon-இல் சற்று விசாலமானதாக, 350 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்படுகிறது.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

என்ஜின்

மேற்கூறிய இரு விஷயங்களில் Nexon EV மற்றும் Tigor EV ஒத்ததாக விளங்கினாலும், இயக்க ஆற்றல் என்று வரும்போது Nexon EV-யின் கை சற்று ஓங்கியுள்ளது. ஏனெனில் இதில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார்- பேட்டரி அதிகப்பட்சமாக 127 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Tigor EV Nexon EV
Power 75 hp 127 bhp
Torque 170 Nm 245 Nm
Battery 26kWh 30.2kWh
Range 300+ km (claimed) 312 km
Charging Time 1 hour (0-80%) 8.5 hours (0-100%)
Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

ஆனால் Tigor EV-யில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 75 பிஎச்பி-ஐ அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. ரேஞ்சு இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே கிடைக்கும். பேட்டரியை சார்ஜ் நிரப்ப Tigor EV-யில் 1 மணிநேரமும் (0- 80%), Nexon EV-யில் 8.5 மணிநேரங்களும் (0-100%) தேவைப்படும்.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

பாதுகாப்பு அம்சங்கள்

Tataவின் தயாரிப்பு என்றாலே பாதுகாப்பு அம்சங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் & கேமிரா, வேகத்தை உணர்ந்து தானாக லாக் ஆகும் கதவு, ஹில் ஹோல்ட் உதவி வசதியுடன் இஎஸ்பி மற்றும் அதி வேகத்தை எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்டவை Tigor EV, Nexon EV என்ற இரு காரிலும் உள்ளன.

Tigor EV Nexon EV
Front Airbags (Dual) Yes Yes
ISOFIX Child Seat Anchors No Yes
ABS+EBD Yes Yes
Reverse Parking Sensors Yes Yes
Reverse Parking Camera Yes Yes
Speed Sensing Door Lock Yes Yes
ESP with Hill Hold Assist Yes Yes
High-Speed Alert Alarm Yes Yes
Global NCAP Crash Test Rating 4-Star 5-Star
Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

ஆனால் கைக்குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுக்கு என்றே பிரத்யேகமாக வழங்கப்படும், நம்பகமான ஐசோஃபிக்ஸ் இருக்கை Anchors Nexon EV காரில் மட்டுமே வழங்கப்படுகின்றன. Tigor EV-இல் இல்லை. இதனால் Tigor EV உலகளாவிய NCAP மோதல் சோதனையில் 4 நட்சத்திரங்களையும், Nexon EV முழு ஐந்து நட்சத்திரங்களையும் பெற்றிருந்தன.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

Tigor EV காரை Tata Motors நிறுவனம் வெளியீடு மட்டுமே செய்துள்ளதே தவிர்த்து இந்த எலக்ட்ரிக் காரின் விலையினை அறிவிக்கவில்லை. மலிவான எலக்ட்ரிக் காராக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் இதன் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையையே ரூ.11 லட்சத்தில் தான் எதிர்பார்க்கிறோம்.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

ஆனால் மறுபக்கம், Nexon EV-யின் ஆரம்ப விலையே ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அதிகப்பட்சமாக ரூ.16.85 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டும் வெவ்வேறான உடல் அமைப்புகளை கொண்டவை. இருப்பினும் இவை இரண்டிலும் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான இட வசதியை பெறலாம். ஓடும் வேகத்திலும், செயல்படுதிறனிலும் மட்டுமே இவை இரண்டும் வித்தியாசப்படுகின்றன.

Tata Nexon EV-க்கு இணையானதா Tigor EV? ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!!

ஆதலால் மிகவும் பட்ஜெட் போட்டு கார் வாங்குகிறீர்கள், இருப்பினும் முதல் காரே எலக்ட்ரிக் காராக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு Tigor EV மிகவும் ஏற்றதாக இருக்கும். ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவழிக்க தயார், தற்போதைய மாடர்ன் காலக்கட்டதிற்கு ஏற்ப கார் வேண்டும் என்றால் Nexon EV பக்கம் செல்லுங்கள்.

Most Read Articles

English summary
Tata Tigor EV vs Nexon EV, What’s The Difference.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X