எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தை அடித்து கொள்ள ஆளே இல்லை. அதற்கு பின்னால் உள்ள காரணங்களை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி. கடந்த 2 தசாப்தங்களாக இந்திய கார் சந்தையின் அசைக்க முடியாத தலைவராக மாருதி சுஸுகி நிறுவனம் இருந்து வருகிறது. 800, ஜென், ஆல்டோ, ஆம்னி, ஸ்விஃப்ட் மற்றும் எஸ்டீம் உள்ளிட்ட பல்வேறு கார்கள் மூலமாக கோடிக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களின் மனதை மாருதி சுஸுகி நிறுவனம் கொள்ளையடித்துள்ளது.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

இன்றைய தேதியில் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்றால், அது மாருதி சுஸுகிதான். இந்திய கார் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மாருதி சுஸுகி நிறுவனம் இருந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் நாங்கள் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணம். மாருதி 800 அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, ஒவ்வொரு காரின் விலையையும் மாருதி சுஸுகி நிறுவனம் சரியாக நிர்ணயம் செய்து வருகிறது. இவ்வளவு பணத்தை வீணாக செலவு செய்கிறோமே என்ற எண்ணம் பெரும்பாலும் எந்த வாடிக்கையாளருக்கும் ஏற்படுவதில்லை.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

இதன் மூலம் இந்தியாவில் நிறைய குடும்பங்களின் சொந்த கார் கனவை மாருதி சுஸுகி நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக சொல்வதென்றால், மாருதி 800 மற்றும் ஆல்டோ. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த 2 கார்கள்தான் இந்தியர்கள் பெரும்பாலானோரின் முதல் கார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் கூட மாருதி 800தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூப்பரான மைலேஜ்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் சிறப்பான மைலேஜை வழங்க கூடியவை. மாருதி சுஸுகி நிறுவனம் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தி விட்டது. தற்போது பெட்ரோல் இன்ஜின் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது. எனினும் பெட்ரோல் இன்ஜினும் கூட சிறப்பான மைலேஜை தருகிறது.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரிய கார்களான எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் சியாஸ் ஆகிய கார்களின் மைலேஜூம் கூட சிறப்பாக இருக்கிறது. பெட்ரோல் மிகவும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும், மாருதி சுஸுகி கார்கள் பிரபலமாக இருக்கின்றன.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

சிஎன்ஜி கார்கள்

மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டாலும் கூட, புதிய தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. இதில், சிஎன்ஜி ஒன்று. இன்றைய தேதியில் இந்தியாவில் அதிக சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி உள்ளது.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களும் மைலேஜை வாரி வழங்குகின்றன. சிஎன்ஜி விலையும் குறைவு என்பதால், இந்த கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் அதிக வரவேற்பை வழங்கி வருகின்றனர். வேகன் ஆர், ஆல்டோ 800, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ மற்றும் எர்டிகா உள்ளிட்ட கார்களில் மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி தேர்வை வழங்கி வருகிறது.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

நம்பகத்தன்மை

தற்போதும் கூட மாருதி 800 கார்களை இந்திய சாலைகளில் நம்மால் அதிக அளவு பார்க்க முடியும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதற்கு 800 ஒரு உதாரணம். மாருதி சுஸுகி கார்கள் மிக நீண்ட காலத்திற்கு உழைக்க கூடியவை. 15, 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மாருதி சுஸுகி கார்கள் கூட இன்னமும் 'ஸ்மூத்' ஆக இயங்குவதை நீங்கள் அதிகம் காண முடியும்.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

எந்தவொரு மாருதி சுஸுகி காரையும், பெரிதாக எந்த பிரச்னையும் இல்லாமல், 10 ஆண்டுகளுக்கு மேல் உங்களால் ஓட்ட முடியும். 10 ஆண்டுகள் என்பது குறைந்தபட்சம்தான். சரியான இடைவெளிகளில் சர்வீஸ் செய்வது போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் இன்னும் பல ஆண்டுகள் உங்களுக்கு உற்ற தோழனாக இருக்கும்.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

பிரம்மாண்ட சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்

இந்தியாவில் மிகப்பெரிய சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை வைத்திருக்கும் நிறுவனங்களில் மாருதி சுஸுகி முதன்மையானது. இந்த ஊரில் கார் ஷோரூம் எல்லாம் இருக்குமா? என நீங்கள் சாதாரணமாக நினைக்கும் நகரங்களில் கூட உங்களால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷோரூமை பார்க்க முடியும். எனவே வாடிக்கையாளர்களால் மாருதி சுஸுகி டீலர்ஷிப்களை எளிதில் அணுக முடிகிறது.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

அதேபோல் எந்த இடத்தில் எந்த நேரத்தில் கார் பழுது என்றாலும், நீங்கள் துளி கூட அச்சப்பட வேண்டியதில்லை. நள்ளிரவு நேரத்தில் கார் பழுதானலும் கூட மாருதி சுஸுகி நிறுவனம் உடனடியாக உங்கள் துணைக்கு வந்து விடும். 24 மணி நேர சர்வீஸ் வசதி கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம்.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூப்பரான ரீ-சேல் வேல்யூ

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் மிக நீண்ட ஆண்டுகளுக்கு தங்களது மதிப்பை தக்க வைத்து கொள்கின்றன. எனவே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் மாருதி சுஸுகி கார்கள்தான் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. நீண்ட காலத்திற்கு உழைப்பது, மைலேஜ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவைதான் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் மாருதி சுஸுகி கார்கள் ஜொலிப்பதற்கு காரணம்.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல மறுவிற்பனை மதிப்பு (ரீ-சேல் வேல்யூ) உள்ளது. எனவே விற்பனை செய்வது என முடிவு செய்தால், உங்களால் நல்ல தொகைக்கு, மிக விரைவாகவே மாருதி சுஸுகி கார்களை விற்பனை செய்து விட முடியும். வாடிக்கையாளர்கள் பலர் உங்கள் காரை வாங்க போட்டி போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு

வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு வழங்கும் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி உள்ளது. கார் வாங்கும் பயணம் தொடங்குவது முதல் இறுதி வரை மென்மையான மற்றும் தொல்லைகள் இல்லாத அனுபவத்தை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாருதி சுஸுகி டீலர்ஷிப்களிலும் இதேபோன்ற அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

எந்த நிறுவனத்தாலும் தகர்க்க முடியாத கோட்டை! மாருதி கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா?

அதாவது ஒரு டீலர்ஷிப்பில் இருந்து மற்றொரு டீலர்ஷிப் மாறுபட்டதாக இருக்காது. ஏனெனில் டீலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் மிக கடுமையாக உழைக்கிறது. மாருதி சுஸுகி கார்களின் விற்பனை அதிகமாக இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்று.

Most Read Articles

English summary
Why are maruti suzuki cars loved in india important reasons
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X