சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

நகர பகுதிகளில் ஏன் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

கார்களில் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என பல்வேறு ரகங்கள் உள்ளன. இதில், ஹேட்ச்பேக் ரக கார்களைதான் நகர பகுதிகளில் நீங்கள் அதிகமாக பார்க்க முடியும். இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஹேட்ச்பேக் கார்கள் ஏன் நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு மிகவும் ஏற்றவையாக உள்ளன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

ஹேட்ச்பேக்குகளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ்!

தரையின் மேற்பரப்பு மற்றும் காரின் அடிப்பகுதி ஆகியவற்று இடையே உள்ள இடைவெளிதான் க்ரவுண்ட் க்ளியரன்ஸ். இந்தியாவின் நகர்ப்புற சாலைகள் எப்படி இருக்கும்? என்பது நம் அனைவருக்கும் தெரியும். குண்டும், குழியுமான இந்த சாலைகளில் கார் வெற்றிகரமாக பயணிக்குமா? அல்லது சேதம் அடைந்து விடுமா? என்பதை க்ரவுண்ட் க்ளியரன்ஸ்தான் தீர்மானிக்கிறது.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

பொதுவாக செடான் கார்களை விட ஹேட்ச்பேக் ரக கார்களின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகம். குண்டும், குழிகளும் நிரம்பிய இந்தியாவின் நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஹேட்ச்பேக் ரக கார்கள் மிகவும் ஏற்றவையாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகம் உள்ள கார்கள்தான் இந்திய சாலைகளுக்கு ஏற்றவை.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

அருமையான பரிமாணங்கள்!

பொதுவாக ஹேட்ச்பேக் ரக கார்கள் அதிகம் உயரமாக இருக்காது. அதேபோல் உயரம் குறைவாகவும் இருக்காது. சரியான உயரத்தில் இருக்கும். ஆனால் இந்த உயரத்திற்கே உங்களுக்கு சிறப்பான ஹெட்ரூம் கிடைக்கும். அத்துடன் ஹேட்ச்பேக் ரக கார்கள் சிறிய ஃப்ரேமைதான் பெற்றிருக்கும். எனவே எஸ்யூவி கார்களை போல், வளைவுகளில் திரும்பும்போது பாடிரோல் பெரிதாக ஏற்படாது.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

எரிபொருள் சிக்கனம்!

பொதுவாக கார்களின் எடை அதிகரிக்க அதிகரிக்க மைலேஜ் குறையும். இதனால்தான் கார்களில் தேவையில்லாத பொருட்களை ஏற்ற வேண்டாம் என கூறுவார்கள். மைலேஜ் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் கார்களின் ஒட்டுமொத்த எடையை குறைப்பதற்கு கார் உற்பத்தி நிறுவனங்களும் தீவிரமாக முயற்சி செய்யும்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

இந்த சூழலில் மைலேஜ் என பார்த்தால் ஹேட்ச்பேக் கார்கள் சிறந்தவை. அவை உருவத்தில் சிறியதாக இருப்பதால் நல்ல மைலேஜை வழங்கும். தினசரி காரில் அலுவலகம் சென்று வர வேண்டிய தேவை உள்ளவர்கள் இதன் காரணமாகதான் ஹேட்ச்பேக்குகளை அதிகமாக விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசலின் விலையை பார்த்தால் மைலேஜ் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு புரியும்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

டிராபிக் ஜாம் பிரச்னை இல்லை!

ஹேட்ச்பேக் கார்கள் உருவத்தில் சிறியதாக இருப்பதால் இன்னும் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஹேட்ச்பேக் கார்கள்தான் ஏற்றவை. பெரிய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் ஹேட்ச்பேக் கார்கள் என்றால், நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை விரைவாக அடைய முடியும்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

போக்குவரத்து நெரிசலால் பெரிய அளவில் தலைவலி ஏற்படாது. அத்துடன் ஹேட்ச்பேக் கார்கள் சிறியதாக இருப்பதால், பார்க்கிங் செய்வதும் எளிது. தற்போது நகர பகுதிகளில் கார்களை பார்க்கிங் செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. நகர பகுதிகளில் நிலவி வரும் இடப்பற்றாக்குறைதான் இதற்கு முக்கியமான காரணம்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

நகை மற்றும் ஜவுளி கடைகள் பார்க்கிங் வசதி குறித்து விளம்பரத்தில் பிரபலப்படுத்தும் அளவிற்கு நிலைமை மோசமாக சென்று கொண்டுள்ளது. எனவே எளிதாக பார்க்கிங் செய்ய விரும்புவர்களும் ஹேட்ச்பேக் ரக கார்களைதான் தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாகவும் ஹேட்ச்பேக் ரக கார்கள் நகர பகுதிகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

புதிதாக கார் ஓட்டி பழகுபவர்களுக்கு ஹேட்ச்பேக்தான் பெஸ்ட்!

பொதுவாக ஹேட்ச்பேக் கார்களில் பானெட் எங்கு முடிகிறது? என்பதை தெளிவாக பார்க்க முடியும். இதன் காரணமாக கார் ஓட்டி பழகுபவர்களுக்கு ஹேட்ச்பேக் கார்கள் மிகவும் ஏற்றவையாக உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை டிரைவிங் ஸ்கூல்களின் முதல் தேர்வாக மாருதி சுஸுகி ஆல்டோ திகழ்கிறது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் ரக கார் ஆகும்.

சிட்டியில் ஹேட்ச்பேக் கார்கள் அதிகமாக ஓடுவதற்கு காரணம் இதுதான்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

புதிதாக கார் ஓட்டி பழகுபவர்கள் நெடுஞ்சாலைகளில் கூட சுலபமாக பயணித்து விடுவார்கள். ஆனால் நகர பகுதிகளில் தடுமாறுவார்கள். அதுவே ஹேட்ச்பேக் ரக கார்களாக இருந்தால் அவர்களால் எளிதாக சமாளித்து விட முடியும். இந்த வகையிலும் ஹேட்ச்பேக் ரக கார்கள் நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு ஏற்றவையாக திகழ்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why hatchback cars better for city driving important reasons
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X