இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் கார் ஏன் தோல்வியடைந்தது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

எந்தவொரு வருடம் அல்லது மாதத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டை வேண்டுமானாலும் எடுத்து பார்த்து கொள்ளுங்கள். இதில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் நிச்சயமாக டாப்பில் இருக்கும். மாருதி சுஸுகி கார்களை வாங்குவதற்கு இந்தியர்கள் விரும்புவதுதான் இதற்கு காரணம். மாருதி சுஸுகி கார்களின் விலை குறைவு என்பது வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விஷயமாக உள்ளது.

இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

ஆனால் இதை விட வேறு சில முக்கியமான அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. இதில், மாருதி சுஸுகி நிறுவன கார்கள் வழங்கும் மைலேஜ் முக்கியமானது. ஆனால் சில சமயங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் இந்திய சந்தையில் தோல்வியையும் தழுவியிருக்கின்றன என்ற உண்மையை மறைக்க முடியாது.

இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

மாருதி சுஸுகி நிறுவனம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்ய போய், பரிதாபகரமாக அது தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் (Maruti Suzuki A-Star) நல்ல உதாரணம். மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் காரின் தோல்விக்கு காரணம் என்ன? அதன் டிசைனா? விலையா? இதை அலசுவதற்கு முன்னால், மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் குறித்த முக்கியமான தகவல்களை பார்த்து விடலாம்.

இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

மாருதி சுஸுகி ஏ-ஸ்டார்

கே-சீரிஸ் (K-series) இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமை ஏ-ஸ்டார் காருக்கு உண்டு. மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,200 ஆர்பிஎம்மில் 66 ஹெச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 90 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு லிட்டர் எரிபொருளில் 17 கிலோ மீட்டர் தொலைவை கவர் செய்ய கூடியதாக இந்த இன்ஜின் இருந்தது. இது மிகவும் சிறிய கார் என்பதால், இன்டீரியரில் இடவசதி நெருக்கடியாகவே இருந்தது. உயரமானவர்கள் இந்த காருக்காக படைக்கப்படவில்லை. அல்லது இந்த கார் அவர்களுக்காக படைக்கப்படவில்லை.

இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

ஆனால் ஏ-ஸ்டார் காரை பயன்படுத்தியவர்கள், இந்த காரை பற்றி பல நல்ல விஷயங்களை கூறியுள்ளனர். அவற்றில் சில பின்வருமாறு:

  • ஸ்மூத் டிரைவிங்
  • அந்த சமயத்தில் சிறப்பான டிசைன். குறிப்பாக மாருதி சுஸுகியின் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது!
  • சிறப்பான ஏர்-கண்டிஷன் சிஸ்டம்
  • அழகான தோற்றம் கொண்ட இன்டீரியர்
  • ஆனாலும் இந்த கார் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?

    இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

    மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் ஏன் தோல்வியடைந்தது?

    மாருதி சுஸுகி நிறுவனம் ஏ-ஸ்டார் காரை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அங்கு அடுத்த தலைமுறை ஆல்டோ காராக இது விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர பிக்ஸோ என்ற பெயரில் நிஸான் ஐரோப்பா நிறுவனத்தாலும் இந்த கார் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் சர்வதேச சந்தைகளில் இந்த கார் வெற்றிகரமான தயாரிப்பாகவே விளங்கியது.ஆனால் சொந்த நாட்டிலேயே மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் தோல்வியை தழுவியது ஏன்?

    இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!
    • விலைதான் மிக முக்கியமான காரணம். 4 பேர் கூட சௌகரியமாக அமர முடியாத ஒரு காருக்கு 4 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை செலவிட பலரும் விரும்பவில்லை.
    • கேபின் ஸ்பேஸ் மற்றொரு முக்கியமான காரணம். சராசரி உயரத்தை விட சற்று அதிகமான உயரம் கொண்டவர்கள் இந்த காரின் பின் இருக்கையில் அமர்வது சிரமமான காரியம்தான்.
    • இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!
      • இதுதவிர ஏ-ஸ்டார் காரின் மைலேஜ் தொடர்பாகவும் பலர் புகார் தெரிவித்தனர். இது உங்களுக்கு வியப்பாக தோன்றலாம். சிறப்பான மைலேஜிற்காக அறியப்படும் ஒரு நிறுவனத்தின் கார் மீது இத்தகைய புகார்கள் எழுந்தது எனும்போது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
      • நான்காவது மற்றும் கடைசி காரணம் போட்டியாளர்கள். ஹூண்டாய் ஐ10 மற்றும் சாண்ட்ரோ கார்களுக்கு போட்டியாக ஏ-ஸ்டார் இருந்து வந்தது. மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் காரை விட இந்த 2 கார்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பினர்.
      • இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

        இதுபோன்ற காரணங்களால்தான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் தோல்வியை தழுவி விட்டது. மேலும் மாருதி சுஸுகி நிறுவனம் ரிட்ஸ் காரை களமிறக்கியதும் ஏ-ஸ்டார் காரின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. ஏ-ஸ்டார் காரை காட்டிலும் ரிட்ஸ் காரின் டிசைன், இடவசதி மற்றும் விலை ஆகிய அம்சங்கள் சிறப்பாக இருந்தன.

        இப்டி ஒரு கார் இருந்ததே நிறைய பேருக்கு தெரியாது... மாருதி சுஸுகி ஏ-ஸ்டார் மண்ணை கவ்வியதற்கு காரணம் இதுதான்!

        எனவே ஏ-ஸ்டார் காரை ஓரங்கட்டி விட்டு ரிட்ஸ் பிரபலமாகி விட்டது. மேலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மோசமான மார்க்கெட்டிங்கும் ஏ-ஸ்டார் காரின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பாகவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில கார்கள் தோல்வியை சந்தித்துள்ளன. மாருதி சுஸுகியின் இமேஜூக்கு பாதிப்பு ஏற்படாமல் அவை சத்தமே இல்லாமல் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டன.

Most Read Articles
English summary
Why maruti suzuki a star failed important reasons
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X