உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

உலகின் டாப் 10 பணக்காரர்களும், அவர்கள் பயன்படுத்தும் கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

உலகின் முதல் பத்து பணக்காரர்களும், அவர்கள் பயன்படுத்தும் சொகுசு கார்களைப் பற்றியும் இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்தியாவின் முகேஷ் அம்பானி முதல் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் வரை அவர்கள் பயன்படுத்தும் கார்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ்:

உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் உருவெடுத்துள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காராக இவர் இருக்கின்ற போதிலும் தன்னுடைய பயணங்களுக்காக ஹோண்டா அக்கார்டு காரையே பயன்படுத்தி வருகின்றார். இந்த காரை சென்டிமெண்டுக்காக தற்போதும் அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது ஆச்சரியமளிக்கும் தகவலாக உள்ளது.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

டெஸ்லா உரிமையாளர் எலன் மஸ்க்:

மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் உரிமையாளர் மற்றும் சிஇஓ-வாக இருப்பவர் எலன் மஸ்க். இவர் மெக்லாரன் எஃப்1 காரை பயன்படுத்தி வருகின்றார். ஜேம்ஸ் பாண்ட் லோடஸ் எஸ்பிரிட் திரைப்படத்தில் இந்த காரை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த சூப்பர் திறன் கொண்ட காரையே எலன் மஸ்க் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 6.16 கோடியாகும்.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

பெர்னார்ட் அர்னால்ட்

பெர்னார்ட் அர்னால்ட் இவர் ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். உலக பணக்காரர்களில் ஒருவரான இவர் ஓவியங்கள் மற்றும் கலைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கின்றார். இவர் பிஎம்டபிள்யூ 760எல்ஐ காரை பயன்படுத்தி வருகிறார். இது 2015ம் ஆண்டு மாடல் ஆகும். இந்த காரைதான் தற்போதும் தனது பெரும்பாலான பயணங்களுக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பெர்னார்ட் அர்னால்ட் பயன்படுத்தி வருகிறார்.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

91 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ், தனது பயணங்களுக்கு போர்ஷே 959 மாடல் காரை பயன்படுத்தி வருகின்றார். இது 1980ல் வாங்கப்பட்ட காராகும். உலகின் நம்பர் பணக்காரராக இருந்த இவர் மிக சமீபத்திலேயே நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

முகப்புத்தக நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்

மார்க் ஸூக்கர்பெர்க்-ஐ அறியாதவர் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. இதற்கு அவர் பணக்காரராக இருப்பது மட்டும் காரணமல்ல, அவர், முகப்புத்தக நிறுவனத்தின் நிறுவனராக இருப்பதும் ஓர் காரணமாகும். சுமார் 73 பில்லியன் பவுண்டுகளுக்கு சொந்தக்காரரான இவர் ஹோண்டா ஜாஸ் காரை பயன்படுத்தி வருகின்றார். பல நேரங்களில் இந்த காரிலேயே அவர் வெளியுலகிற்கு காட்சி தந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

வாரன் பஃப்பட்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான இவர் பலதரபட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார். வணிக அதிபர், முதலீட்டாளர் மற்றும் ஃபிளாந்திரோபிஸ்ட் போன்ற பல ரோல்களில் அவர் காட்சியளிக்கின்றார். இதுமட்டுமின்றி பெர்க்ஷைர் ஹாதவே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற ரோலையும் அவர் மேற்கொண்டு வருகின்றார். இவர் கடிலாக் எக்ஸ்டிஎஸ் எனும் அதிக பாதுகாப்பான மற்றும் சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

கூகுள் நிறுவனர் லேரி பேஜ்/ஷெர்கே ப்ரின்

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் ஷெர்கே ப்ரின் கடந்த காலங்களில் ஒரே வாகனத்திலேயே காட்சியளித்து வந்தனர். இருப்பினும், இவர்களிடத்தில் தங்களுக்கென தனிதனி கார்களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அந்தவகையில், லாரி பேஜ் இடத்தில் டெஸ்லா ரோட்ஸ்டரும், ஷெர்கே ப்ரின் இடத்தில் டொயோட்ட ப்ரியூஸ் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிஸ்ஸன்

கணினி தயாரிப்பு நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் லேரி எலிஸ்ஸன். 65 மில்லியன் பவுண்டுகளுக்கு சொந்தக்காரரான இவர் பல விலையுயர்ந்த கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். லெக்சஸ் எல்எஃப்ஏ, மெக்லாரன் எஃப்1 மற்றும் லெக்சஸ் எல்எஸ்600எச் ஆகிய சூப்பர் கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். இவரிடத்தில் இன்னும் பல விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

முகேஷ் அம்பானி

ஆசிய கண்டத்தின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி இடத்தில் பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. இவரின் சொத்து மதிப்பு 59 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்டன் மார்டின், பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுமட்டுமின்றி, அண்மையில் விற்பனைக்கு வந்த மேபேக் 62 சொகுசு காரும் இவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளது.

உலகின் டாப் 10 பணக்காரர்களும் அவர்களின் சொகுசு கார்களும்! என்ன ஜெஃப் பெசோஸ் இந்த காரை பயன்படுத்துறாரா?

அமன்சியோ ஒர்டேகா

டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான இவர் ஸ்பேனிஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 58 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இவரும் ஓர் மிகப்பெரிய கார் பிரியர் ஆவார். இவரிடத்தில் ஆடி ஏ8, மெர்சிடிஸ் ஜிஎல் உள்ளிட்ட சொகுசு கார்களைப் பயன்படுத்தி வருகின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World’s Top 10 Billionaires And His Cars. Read In Tamil.
Story first published: Saturday, July 17, 2021, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X