புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இந்தியாவில் தற்சமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார் அறிமுகங்களுள் ஒன்றாக இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

சந்தையில் அதிகரித்துவரும் போட்டியின் காரணமாக இந்த புதிய எஸ்யூவி வாகனத்தில் ஏகப்பட்ட வசதிகளை பிரிவிலேயே முதல்முறையாக வழங்க முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இந்த வகையில் புதிய எக்ஸ்யூவி700 காரில் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளன என்பது ஏற்கனவே தெரியவந்துவிட்டது. இந்த நிலையில் தான் தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 மாடலில் வழங்கவுள்ள பிரத்யேக ஸ்மார்ட் கதவு கைப்பிடிகளை பற்றிய டீசர் வீடியோவினை வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாடலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், இத்தகைய ஸ்மார்ட் கைப்பிடிகள் பெரிய தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களிலேயே முதன்முறையாக எக்ஸ்யூவி700-இல் தான் வழங்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

தற்சமயம் விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாகவே எக்ஸ்யூவி700 கொண்டுவரப்படவுள்ளது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். 2026ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 9 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இதில் எக்ஸ்யூவி700 உடன் புதிய தலைமுறை ஸ்கார்பியோ, 5-கதவு தார், பொலிரோ நியோ உள்பட புதிய இவி ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படவுள்ள எலக்ட்ரிக் கார்களும் அடங்கவுள்ளன. இதில் முதலாவதாக வெளிவரவுள்ள எக்ஸ்யூவி700 மோனோகாக் ப்ளாட்ஃபாரத்தில் வெளிவரவுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இதற்கு முன் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சோதனை ஓட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்த மஹிந்திரா எஸ்யூவி காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் எல்இடி டிஆர்எல்களுடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், சிக்னெச்சர் வடிவிலான க்ரோம் க்ரில் உடன் புத்துணர்ச்சியான முன்பக்கத்தை எக்ஸ்யூவி700 பெற்றுவரவுள்ளதை அறிந்திருந்தோம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இவை மட்டுமின்றி அளவில் பெரிய அலாய் சக்கரங்கள், C-வடிவிலான எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவையும் இந்த எஸ்யூவி காரின் வெளிப்புறத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. உட்புறத்தில் டேஸ்போர்டின் மீது இரு திரைகள் வழங்கப்படவுள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இதில் ஒன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு, மற்றொன்று டிஜிட்டல் கன்சோலிற்காக ஆகும். இவற்றுடன் மெமரி செயல்பாட்டு வசதியுடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், டிரைவ் மோட்கள், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, நிலை 1 தானியங்கி டிரைவிங் போன்றவற்றையும் இதன் கேபினில் எதிர்பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பிரத்யேகமான கதவு கைப்பிடிகள்!! எஸ்யூவி கார்களிலேயே முதல்முறையாக!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு மஹிந்திரா நிறுவனம் புதிய 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் புதிய டீசல் என்ஜினை வடிவமைக்கும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறதாம்.

Most Read Articles

English summary
Mahindra XUV700 To Get Segment-First Smart Door Handles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X