ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி

ஜாதி பெயரை தாங்கியவாறு காரின் மேற்கூரையில் பயணித்த இளைஞர்களுக்கு போலீஸ் தகுந்த பாடம் கற்பித்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

அண்மையில் மணப்பெண் ஒருவர் காரின் பேனட் மீது அமர்ந்து திருமண பவனி (ஊர்வலம்) சென்றதற்காக வழக்கு பதிவிற்கு ஆளாகினார். அவருடன் சேர்த்து கல்யாண புகைப்பட கலைஞர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இந்த அதிரடி சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தின் சூடு அடங்குவதற்கு முன்னரே மற்றுமொரு விதிமீறல் சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர்கள் இருவர், வெவ்வேறு கார்களின் மேற்கூரையில் அமர்ந்தவாறு பயணித்த காரணத்திற்காக போலீஸார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

இளைஞர்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா கார்களை விதிமீறலின்போது பயன்படுத்தியிருக்கின்றனர். இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பதிவெண் இல்லாதது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

இதுமட்டுமின்றி, இரு இளைஞர்களும் தங்களின் ஜாதியை அடையாளப்படுத்தி பதாகையை தாங்கியவாறு சென்றது மேலும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த செயல்களைத் தொடர்ந்தே காவல்துறையினர் இளைஞர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு ரூ. 36 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

பல்வேறு பிரிவுகளின்கீழ் இளைஞர்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. வரம்பற்ற வேகம், கோவிட்-19 விதிகளை மீறியது, முகக்கவசம் அணியாதவது, வாகனத்தை மாடிஃபை செய்தது என பல விதிகளின்கீழ் ஒவ்வொருக்கும் தலா ரூ. 18 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

பொதுவெளியில் வாகன ஸ்டண்ட்டில் ஈடுபடக் கூடாது என காவல்துறையினர் பல காலமாக அறிவுறுத்துகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் வாகன ஸ்டண்டில் ஈடுபடுவதைத் தொடர்ச்சியாக செய்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இணையத்தில் வைரலாகி வீடியோவை அடிப்படையாகக் கொண்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜாதி பெயரை தாங்கியவாறு கார் மேற்கூரையில் பயணித்த இளைஞர்கள்! அடுத்தமுற செய்ய தயங்குவாங்க! போலீஸ் செஞ்சது அப்படி!

கடந்த காலங்களிலும் இதேபோன்று இணையத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அபராதம் மற்றும் வாகன பறிமுதல் உள்ளிட்ட அதிரடிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும், பொதுவெளியில் ஸ்டண்ட் செய்வோர் தங்களின் அத்துமீறலை குறைத்துக் கொண்டதாக தெரியவில்லை.

இருப்பினும், வாகன ஸ்டண்ட் நிகழ்வுகளை காவல்துறையினர் இரும்புகரம் கொண்டு அடக்க முயற்சித்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே டெல்லியில் அரங்கேறிய இந்த சம்பவம் அமைந்துள்ளது. இதுமாதிரியான ஸ்டண்ட் நிகழ்வுகள், ஸ்டண்டில் ஈடுபடுவபர்களுக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youths Gets Rs.35,000 Fine For Roof Ride. Read In Tamil.
Story first published: Saturday, July 17, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X