காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

பிரபல யுட்யூப் சேனலைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கு அம்மாநில ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன துறையினர் மிக உச்சபட்ச அபராதத்தை வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

அண்மையில் யுட்யூபில் ஓர் வீடியோ மிக வேகமாக வைரலாகியது. அவ்வீடியோவில் இளைஞர் ஒருவர் காரை மிக வேகமாக வட்டமடித்தவாறு ஓட்டுவதை போல் காட்சிகள் அமைந்திருக்கின்றன. இளைஞரின் இந்த சாகசத்தை ட்ரோன், பிற வீடியோ கேமிரோ என அனைத்தும் காட்சிப்பதிவு செய்திருக்கின்றன.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

பார்ப்பதற்கு சினிமா காட்சிப் போல இருக்கும் இந்த நிகழ்வு யுட்யூபில் காசு பார்க்கவும், பார்வையாளர்களைக் கவர செய்வதற்காக மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சாகச நிகழ்வானது காரை பாதையில் சாய்க்கும் வகையில் செய்யப்பட்டிருக்கின்றது.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

இது மிகவும் ஆபத்தான செயலாகும். எனவேதான் கேரள போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் ஆகியோர் யுட்யூபர் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இதுபோன்று பொது வெளியில் வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க செயலாகும்.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

எனவேதான் இணையத்தில் வைரலாகும் வீடியோவைக் கொண்டு இதற்கு முன்பாகவும் சாகச பிரியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அந்தவகையிலேயே மஹிந்திரா தார் எஸ்யூவி காரை சாகசம் என்ற பெயரில் கீழே கவிழ்த்த யுட்யூபருக்கு பெரும் தொகை அபராதமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

இதுமட்டுமின்றி இன்னும் பல விசாரணைகளை யுட்யூபரிடம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு விதிமீறல்களில் அவர் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தற்போது தகவல் வெளியிட்டிருக்கின்றன. ஆகையால், மஹிந்திரா தார் பறிமுதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

சமீப காலமாக யுட்யூபில் காசு பார்க்கவும், சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை பெறுவதற்காகவும் நெட்டிசன்கள் சில தேவையற்ற மற்றும் முகம் சுழிக்கக் கூடிய செயல்களை செய்து அதுகுறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய செயலைக் களையெடுக்கும் விதமாக காவல்துறை இணையத்தின்மீது அதிகம் கவனம் செலுத்தி வருகின்றது.

காசு பாக்க நினைத்த யுட்யூபர்... ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக வாங்கி சென்ற ஆர்டிஓ அதிகாரிகள்! தரமான சம்பவம்!

இதனடிப்படையிலேயே சமீப காலமாக இணையத்தில் வைரலாகும் வீடியோக்களின் அடிப்படையில் பலரின்மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையிலேயே, வைரலாகிய வீடியோவின் அடிப்படையில் மளம்புழத்தைச் சேர்ந்த பிரபல யுட்யூபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

யுட்யூபர் சேதம் செய்திருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. கடந்த மாத நிலவரப்படி ஓர் தார் எஸ்யூவி காரை இப்போது புக் செய்தால் சுமார் 10 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை காத்திருப்பு காலங்கள் தென்படுகின்றது. ஆகையால், நாட்டின் அதிகம் விற்பனையாகும் காராக தார் எஸ்யூவி மாறியிருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் அண்மையில்தான் தார் எஸ்யூவி காரின் விலையை உயர்த்தியது. இக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 32 ஆயிரம் தொடங்கி ரூ. 92 ஆயிரம் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கார் பன்முக புதிய அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youtuber gets rs 10500 fine from rto and mvd here is full details
Story first published: Friday, September 10, 2021, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X