10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போனால் எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே.. தமிழில்!

ரூ. 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிப்பது எப்படி இருக்கும் என்பதை தமிழ் பேசும் இரு இளைஞர்கள் விவரித்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

உலகின் தலை சிறந்த சொகுசு கார்களில் ரோல்ஸ் ராயஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் அடங்கும். இந்த நிறுவனம் பன்முக வாகன மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. அனைத்துமே சொகுசு வசதிக்கு பெயர்போன தயாரிப்புகளாகும். எனவேதான், பெரும் செல்வந்தர்களிடத்தில் மட்டுமே இக்கார் பயன்பாட்டில் இருக்கின்றன.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நோக்கில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாடகைக்கு வழங்கியும் வருகின்றன. ஆகையால், இன்றைய காலத்தில் சில பல ஆயிரங்களை வைத்தால் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்துவிடலாம் என்ற நிலை நமது நாட்டில் நிலவுகின்றது.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

அந்தவகையில், ரூ. 9.50 கோடி என்ற மிக உயர்ந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் வாடகைக்கு எடுத்திருக்கின்றார். அவர் அந்த காரில் பயணம் செய்தபோது என்ன மாதிரியான அனுபவத்தைப் பெற்றார் என்பதை வீடியோவாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

இந்த வீடியோ கூற வரும் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். பல்வேறு தகவல்கள் இக்கார் குறித்தும், காரில் மேற்கொண்ட பயணம்குறித்தும் இவ்வீடியோவில் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், கார் வழங்கும் மைலேஜ் குறித்து அதன் ஓட்டுநர் கூறிய தகவல் அனைவரையும் உறைய வைக்கும் வகையில் உள்ளது.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 2.5 கிமீ முதல் 3 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும் என கூறியுள்ளார். இது நகரத்தின் சாலைகளில் வைத்து இயக்கும்போது கிடைக்கும் மைலேஜ் ஆகும். இதுவே, நெடுஞ்சாலைகளில் வைத்து இக்காரை இயக்கினால் 4கிமீ தொடங்கி 5 கிமீ வரை மைலேஜ் வழங்குமாம்.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

மேலும், இக்காரில் வழக்கமான பெட்ரோலைப் பயன்படுத்த முடியாது. ஆக்டேன் 97 அளவுள்ள பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த முடியும் என அதன் ஓட்டுநர் கூறியுள்ளார். தொடர்ந்து, காரில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும்போதும் சிறு துளியளவும் அதிக வேகத்தில் பயணிக்கின்றோம் என்ற அனுபவத்தை வழங்கவே இல்லை என யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்களும் ஒரு மித்தமாக கூறியுள்ளனர்.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

அதுமட்டுமின்றி, பேந்தம் சொகுசு காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஓர் இளைஞர் அதில் இருக்கும் மசாஜ் வசதி தன்னை ரொம்ப கவர்ந்துவிட்டதாக கூறுகின்றார். அந்தளவிற்கு சொகுசு வசதியை வாரி வழங்கும் ஓர் வாகனமாகவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

10 மேற்பட்ட வித்தியாசமான மசாஜ் வசதியை ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரின் இருக்கைகள் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஜன்னல்களை மறைக்க உதவும் துணிகளின் ரு. 15 லட்சம் என அதன் ஓட்டுநர் கூறுகின்றார். இந்த தகவலைக் கேட்ட இரு இளைஞர்களும் ஒரு ஷாக்கானதை நம்மால் காண முடிகின்றது.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

இது அவங்களுக்கு மட்டுமல்ல வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் ஷாக்கை வழங்கும் வகையில் அமைந்தது. மற்றபடி காரில் பயணித்த அனுபவம் அவர்களை அதிகளவில் கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, கியர் மாற்றும்போது சின்ன இடையூறு கூட ஏற்படாதது மற்றும் வெளிப்புற சத்தம் துறு துளியளவும் கேட்காதது என அனைத்தும் காரில் பயணித்தவர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

இதுமட்டுமின்றி, கதவை திறப்பதற்கூட பொத்தான் வழங்கப்பட்டிருப்பது, மேற்கூரையில் நட்சத்திரம் போன்ற சிறிய சிறிய மின் விளக்குகள் கொடுக்கப்பட்டிருப்பது, கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு என அனைத்தும் யுட்யூப் இளைஞர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றது.

10 கோடி ரூபா ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போன எப்படி இருக்கும்?.. அய்யோ இவங்க சொல்லும்போதே டெம்ப்ட் ஆகுதே...

மேலும், இளைஞர்கள் கூறுவதைப் பார்த்தால் வாழ்க்கையில் ஒரு முறையாவது ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரில் பயணித்துவிட வேண்டும் என நினைக்கு தோன்று அந்த அளவிற்கு இளைஞர்கள் அக்காரை வர்ணித்து வீடியோவில் கூறியுள்ளனர். நீரஜ் இளங்கோவன் யுட்யூப் சேனல் வாயிலாக இளைஞர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவைக் கீழே காணலாம்.

Image Courtesy: Neeraj Elangovan

இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வாயிலாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மிக சுலபமாக வாடகைக்கு கிடைத்தாலும், அவற்றை வாடகைக்கு எடுப்பதே சற்று பெரிய விஷயம் ஆகும். ரோல்ஸ் ராஸ்ஸ் சொகுசு கார்கள் லட்ச ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்திலேயே வாடகைக்கு கிடைக்கின்றன. எனவே அவற்றை வாடகைக்கு எடுப்பது என்பது பலருக்கு இயலாத விஷயமே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youtuber Tells How He Feel First Time Travel In 10 Crore Rupee Rolls Royce Phantom. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X