புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா மெர்சலாயிருவீங்க!!

புத்தம் புதிய மற்றும் விலையுயர்ந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிராக்டரைப் போல் பயன்படுத்தியிருக்கின்றார். இதற்கான காரணம் மற்றும் எங்கு இது அரங்கேறியது என்பதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

பிராண்ட் நியூ ஹூண்டாய் க்ரெட்டா காரை இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது மற்றும் ஏன் இந்த விநோதம் என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள், பதிவிற்குள் செல்லலாம்.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கே முதல் இடம். கடந்த வருடம் இந்த காரின் புதிய தலைமுறை வெர்ஷனை ஹூண்டாய் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தலைமுறையின் வருகை இன்னும் இக்காரின் விற்பனையை அதிகரிக்கச் செய்தது.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

இத்தகைய புகழ்பெற்ற இந்தியர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கும் ஓர் பிரபல எஸ்யூவி காரை இந்திய இளைஞர் ஒருவர் டிராக்டர்களுக்கு இணையாக பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

யுட்யூபில் வீடியோவை பதிவிடுவதற்காகவே உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் க்ரெட்டா காரை டிராக்டராக பயன்படுத்தியிருக்கின்றார். இதன்படி எடுக்கப்பட்ட வீடியோவை தனது முசாபீர் ராஜ் எனும் யுட்யூப் சேனலில் அவர் பதிவிட்டும் இருக்கின்றார்.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

விவசாய நிலத்தை சீர்படுத்துவதற்காக அவர் பயன்படுத்தியது ஹூண்டாய் க்ரெட்டா காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் கொண்ட மேனுவல் வேரியண்ட் ஆகும். இந்த காரின் பின்புறத்திலேயே களப்பைப் போன்ற ஓர் கருவி பயன்படுத்தப்பட்டு, நிலம் உழப்பட்டது.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

முன்னதாக இக்கருவியை ஓர் டிராக்டரே கொண்டு வந்தது. இதில் பிரித்தெடுக்கப்பட்ட களப்பை க்ரெட்டா காருடன் ஓர் கயர் கொண்டு இணைக்கப்பட்டது. இதன் பின்னரே ஹூண்டாய் க்ரெட்டா ஓர் டிராக்டராக மாறியது. கரடு-முரடான அந்நிலத்தில் டிராக்டருக்கு இணையாக அதனால் செயல்பட முடியவில்லை என்றாலும் குறைந்தபட்ச நிலத்தை திறன்பட அக்கார் உழுதிருக்கின்றது.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

ஆஹா, அப்போ டிராக்டருக்கு பதிலா ஹூண்டாய் க்ரெட்டா காரையே பயன்படுத்திக்கலாமானு நினைச்சுடாதீங்க. இது டிராக்டரை விட அதிக விலையுயர்ந்த வாகனம். மேலும், டிராக்டருடன் ஒப்பிடுகையில் இதன் பராமரிப்பு செலவும் சற்று கூடுதல் ஆகும்.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

ஹூண்டாய் க்ரெட்டா கரடு-முரடான பாதையில் எந்தவொரு சிக்கலுமின்றி பயணித்தற்கு மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. நிலப்பரப்பு நன்றாக காய்ந்து இருந்ததே இதற்கு முக்கிய காரணம். இதுவே, அந்த நிலம் ஈரப்பதத்துடன் இருந்திருந்தால் க்ரெட்டாவால் நகர்வதே மிக சிரமமாக மாறியிருந்திருக்கும்.

புத்தம் புதிய ஹூண்டாய் காரை டிராக்டராக மாற்றிய இளைஞர்... விலையயுர்ந்த காரில் ஏன் இந்த விபரீத முயற்சினு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!

ஆம், ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த வாகனம் க்ரெட்டா எஸ்யூவி அல்ல என்பதே நிதர்சணமான உண்மை. இந்த கார் முன் வீல் இயக்கம் கொண்ட வாகனமாகும். ஆகையால், இதனைக் கொண்டு ஆஃப்-ரோடுகளைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. பன்முக சிறப்பு வசதிகளை இக்கார் தாங்கியிருப்பதனாலும், கவர்ச்சியான ஸ்டைலைக் கொண்டிருப்பதாலும் நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Image Courtesy: MUSAFIR RAJ

ரூ. 9,99,990 லட்சம் தொடங்கி ரூ. 17,62,400 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youtuber Uses Hyundai Creta SUV As A Tractor. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X