தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

இந்தியாவில் பாதுகாப்பே இல்லாமல் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

இந்தியாவில் பாதுகாப்பு திறன்கள் கொண்ட கார்களின் ஆதிக்கம் அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது, அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியிருக்கின்றது. ஐந்திற்கு ஐந்து முதல் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்கள் ரேட்டிங் பெற்ற கார்கள் நம் நாட்டிக் விற்பனைக்குக் கிடைக்க தொடங்கியிருக்கின்றன.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இரு நிறுவனங்களே இந்தியாவிற்கான அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. டாடாவின் நெக்ஸான், பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்களாக இருக்கின்றன. இதேபோல் மஹிந்திரா நிறுவனத்தின் தார் மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய கார் மாடல்களும் மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்களாக உள்ளன. குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்டின் வாயிலாக இதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

மேலும், ரெனால்ட் நிறுவனத்தின் எம்பிவி ரக காரான ட்ரைபரும் அதிக பாதுகாப்பான கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இந்த விஷயத்தில் பங்களிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று. நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பு கூட ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் என்ற தரத்தில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

அந்தவகையில், துரதிர்ஷ்யவசமாக இந்திய சந்தையில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்குடன், விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் சில கார் மாடல்களைப் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)

நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட். இந்திய ஹேட்ச்பேக் பிரிவின் தலைவன் என்று கூட இந்த கார் மாடலை கூறலாம். அந்தளவிற்கு மிக சிறப்பான விற்பனையைப் பெறும் கார் மாடலாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. ஆனால், பாதுகாப்பு ரேட்டிங்கில் பூஜ்ஜியம் ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருக்கின்றது.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்விலேயே இக்கார் இவ்வளவு மிக குறைவான புள்ளிகளை அது பெற்றது. அதே நேரத்தில் மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்டுகள் என்ற உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையை இந்த கார் பெற்று வருகின்றது. தற்போது, இந்தியாவில் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

இதனை நிறுவனம் ஹார்டெக்ட் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கி வருகின்றது. புதிய செலிரியோ காரும் இதே பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கப்பட்டு வருகின்றது. ஸ்விஃப்ட் காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக்குகள், இஎஸ்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இருப்பினும், மிக மிக குறைவான புள்ளிகளை மோதல் ஆய்வில் இது பெற்றது. இதன் விளைவாக பாதுகாப்பான பயணங்களுக்கு ஏற்ற கார் இதுவல்ல என்பது தெரிய வந்திருக்கின்றது.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

மாருதி சுசுகி பலினோ (Maruti Suzuki Baleno)

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மட்டுமில்லைங்க பலினோ கார் மாடலும் பாதுகாப்பு தரமற்ற வாகனமாகும். இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக வாகனமாகும். இதுவும் இப்பிரிவில் தலைவன் என்று கூறுமளவிற்கு விற்பனையைப் பெற்று வருகின்றது. ஆனால், இதன் பாதுகாப்பு தரம் பூஜ்ஜியமாக இருக்கின்றது. லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு பூஜ்ஜியம் தர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

அதேநேரத்தில் ஸ்விஃப்டைக் காட்டிலும் கணிசமான கூடுதல் புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. இருப்பினும், அது ஸ்டாரைகூட பெற உதவவில்லை. மாருதி சுசுகி நிறுவனம் ஆரம்பத்தில் பலினோ கார் மாடலை செடான் ரகத்திலேயே விற்பனைக்கு வழங்கியது. 1998இல் இந்த ரகத்திலேயே அது விற்பனைக்குக் கிடைத்தது. 2015க்கு பின்னர் ஹேட்ச்பேக் வெர்ஷனாக இது மாற்றப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster)

ரெனால்ட் டஸ்டர் இந்திய எஸ்யூவி கார் பிரிவில் 2012ம் ஆண்டில் இருந்து விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான இது பாதுகாப்பு ரேட்டிங்கில் பூஜ்ஜியத்தைப் பெற்றிருக்கின்றது. லத்தீன் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு பூஜ்ஜியம் ரேட்டிங்கைப் பெற்றது.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர் பேக்குகள் மற்றும் இஎஸ்சி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இது நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகளைப் பெறாத காரணத்தினால் பூஜ்ஜியம் தரம் கொண்ட காராக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மோதல் ஆய்வில் இந்த காரில் பெட்ரோல் லீக் போன்ற பல்வேறு பாதுகாப்பற்ற பிரச்னைகளைச் சந்தித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

தயவு செஞ்சி இந்த கார்களை எல்லாம் இங்க இருந்து எடுத்து போய்டுங்க... இந்தியாவின் பாதுகாப்பே இல்லா கார் மாடல்கள்!

ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson)

லத்தீன் என்சிஏபி அமைப்பு அண்மையில் இந்தியா உள்ளிட்ட உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வரும் 2021 வெர்ஷன் ஹூண்டாய் டக்சன் எஸ்யூவி காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த பிரமாண்டமான கார் மாடல் மோதல் ஆய்வில் ஒரு ஸ்டார் ரேட்டிங்கைக்கூட பெறவில்லை. மிக மோசமான பாதிப்புகளைப் பெற்று மண்ணைக் கவ்வியது. இதன் விளைவாக இக்காருக்கு பூஜ்ஜியம் ரேட்டிங் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அண்மையில் வெளியிடப்பட்ட தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Zero star safety rating cars in india
Story first published: Tuesday, December 14, 2021, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X