இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

இந்தியாவில் அமெரிக்க பிராண்ட் கார்களுக்கு நல்ல ராசியே இருந்ததில்லை. ஃபோர்டு & செவ்ரோலெட் என 2 அமெரிக்க கார் பிராண்ட்கள் நம் நாட்டு சந்தையில் கடந்த காலங்களில் களமிறங்கியுள்ளன. ஆனால் இவை இரண்டும் தற்சமயம் இந்தியாவில் இல்லை. ஆனால் சாலைகளில் செல்லும் இவற்றின் கார்கள் இந்த பிராண்ட்களை ஞாபகப்படுத்துகின்றன. அவ்வாறு, இப்போதும் இந்திய மக்கள் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் அமெரிக்க கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

1. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியாவில் இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக விற்பனையாகும் என சொல்லக்கூடிய அளவிற்கு தரமான அமெரிக்க ஸ்டைல் கார் என்றால், அது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தான். அதனாலேயே அதனை இந்த லிஸ்ட்டில் முதலாவதாக பார்க்கிறோம். சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான இது ஆற்றல்மிக்க டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

2. ஃபோர்டு எண்டேவியர்

ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார் எண்டேவியர் ஆகும். நம் நாட்டில் சிறப்பாக விற்பனையான மிகவும் சில ஃபோர்டு கார்களுள் எண்டேவியரையும் ஒன்று என சொல்லலாம். இதனாலேயே குறிப்பிட்ட கால இடைவெளியில் எண்டேவியரை ஃபோர்டு அப்டேட் செய்துவந்தது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

3. செவ்ரோலெட் க்ரூஸ்

ஃபோர்டு அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பெற்ற மற்றொரு அமெரிக்க கார் பிராண்ட், செவ்ரோலெட் ஆகும். இந்த பிராண்டில் இருந்து 2009இல் க்ரூஸ் என்ற பெயரில் செடான் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிவிலேயே பெரிய அளவிலான என்ஜினை பெற்றதினால் இப்போதும் செவ்ரோலெட் க்ரூஸ் கார்களை சாலையில் காண முடிகிறது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

4. செவ்ரோலெட் பீட்

மலிவான கார்களுக்கே இந்தியாவில் அதிகளவில் தேவை உள்ளது என்பதை உணர்ந்து செவ்ரோலெட் நிறுவனம் பின்னர் அறிமுகப்படுத்திய அளவில்-சிறிய கார் தான் பீட் ஆகும். அளவில் சிறியதான தோற்றத்தை கொண்டது மட்டுமின்றி, செவ்ரோலெட் பீட் காரில் ஹெட்லைட்களில் துவங்கி அனைத்து அம்சங்களும் தனித்துவமானவைகளாக பார்க்கப்பட்டன. குறிப்பாக உட்பக்க டேஸ்போர்டில் மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படுவதை போன்றதான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

5. ஃபோர்டு ஃபிஸ்டா

இந்தியாவில் ஃபோர்டு பிராண்ட் மக்கள் மத்தியில் பிரபலமானதாக உருவெடுப்பதற்கு அடித்தளமாக அமைந்த கார்களுள் ஒன்று ஃபிஸ்டா ஆகும். 1.6 லிட்டர் டுராடெக் பெட்ரோல் என்ஜின் உள்பட மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்ட ஃபிஸ்டாவின் 2ஆம் தலைமுறை மாடல் 2011இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 3 வருடங்களில் ஃபிஸ்டாவின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

6. ஃபோர்டு ஃபிகோ

இந்தியாவில் ஃபோர்டு அறிமுகப்படுத்திய மற்றொரு ஹேட்ச்பேக் கார் ஃபிகோ ஆகும். அறிமுகமான சமயத்தில் பிரிவிலேயே ஆற்றல்மிக்க காராக விளங்கிய ஃபிகோவில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டது. இது அதிகப்பட்சமாக 100 பிஎஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அப்டேட் செய்யப்பட, ஃபிகோ ஸ்போர்டியான தோற்றத்தை பெற்றது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

7. செவ்ரோலெட் ட்ரைல்பிளாஸர்

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தனது அளவில்-பெரிய அமெரிக்க எஸ்யூவி காரை அறிமுகம் செய்து இந்தியர்களை கவர்ந்துவிட வேண்டும் என்கிற திட்டத்தில் செவ்ரோலெட் கொண்டுவந்த கார் தான் டிரைல்பிளாஸர் ஆகும். பெயருக்கு ஏற்ப நன்கு பெரியதாக, முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளித்த டிரைல்பிளாஸர் வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே விற்பனையில் இருந்த நிலையில், இதன் விற்பனை இந்தியாவில் 2017இல் நிறுத்தி கொள்ளப்பட்டது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

8. செவ்ரோலெட் கேப்டிவா

செவ்ரோலெட் பிராண்டில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த எஸ்யூவி கார் கேப்டிவா ஆகும். எந்த அளவிற்கு விலையுயர்ந்தது என்றால், அப்போதே இதன் விலை ரூ.25.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இத்தகைய அதிகப்படியான விலையினாலேயே 2008இல் அறிமுகப்படுத்தப்பட்ட கேப்டிவா காரின் விற்பனை 4 வருடங்களில், அதாவது 2012இல் நிறுத்தி கொள்ளப்பட்டது.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

9. ஃபோர்டு மாண்டியோ

ஃபோர்டு இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் செடான் கார் மாண்டியோ ஆகும். சுமார் 4.7 மீட்டர் நீளத்தில் நன்கு நீண்ட செடான் காராக கொண்டுவரப்பட்ட இதில் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன. இந்த என்ஜின்களில் எந்த குறையும் இல்லை... குறை அனைத்தும் மாண்டியோ காரின் விலையில் தான் இருந்தது. ஏனெனில் இந்த காரின் பாகங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்பட்டன.

இந்தியாவில் இப்போது வாங்க முடியாத 10 அமெரிக்கன் பிராண்ட் கார்கள்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்...

10. ஃபோர்டு ஐகான்

1995இல் ஃபோர்டு இந்தியவில் நுழைந்த பிறகு, 4 வருடங்கள் கழித்து அறிமுகப்படுத்திய கார் தான் ஐகான் ஆகும். உலகளவில் விற்பனை செய்யப்பட்ட ஃபிஸ்டாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐகான், ஃபோர்டின் லக்சரி சப்-காம்பெக்ட் செடான் காராக விளங்கியது. அதன்பின் இதன் 2ஆம் தலைமுறை மாடல் 2008இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 14:14 [IST]
English summary
10 iconic american cars that indians drove
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+