ஒரு சில சொகுசு கார்கள் நடிகர் ஷாருக்கானிடம் மட்டும் தான் இருக்கு!! இவையெல்லாம் பலருக்கு கனவாச்சே...
ரசிகர்களால் 'கிங் கான்' என செல்லமாக அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனித்துவமான சொகுசு கார்களை சேகரிப்பதை விரும்பக்கூடியவர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த வகையில் ஷாருக்கானிடம் உள்ள லக்சரி கார்களில் 10 கார்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

1. ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் ட்ராப்ஹெட் கூபே
அறிமுகமான சமயத்தில் இருப்பதிலேயே விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காராக பாண்டோம் ட்ராப்ஹெட் கூபே விளங்கியது. தற்சமயம் விற்பனையில் இல்லாத இந்த ரோல்ஸ் ராய்ஸ் செடான் காரின் விலை அறிமுகமான நேரத்தில் ரூ.7 கோடியாக இருந்தது. அலங்கார ஆக்ஸஸரீகள் சேர்த்தால், இந்த விலை இன்னும் அதிகரிக்கும்.

2. பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி
பாண்டோம் ட்ராப்ஹெட் கூபே காரை போன்று நடிகர் ஷாருக்கானிடம் உள்ள உலகளவில் பிரபலமான கார்களுள் ஒன்று, பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஆகும். வெறும் இரு கதவுகளை மட்டுமே கொண்ட லக்சரி காரான இது அதன் பருத்த உடலமைப்பினாலேயே வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த 2-கதவு கூபே காரில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

3. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ்
மேற்கண்ட ரோல்ஸ்-ராய்ஸ் & பெண்ட்லீ கார்களுக்கு இணையாக இல்லாவிடினும், கேபினில் வழங்கப்பட்டிருக்கும் சொகுசு அம்சங்கள் மற்றும் காற்றியக்கவியலுக்கு இணக்கமான பண்பை வைத்து பார்க்கும்போது, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் சிறப்பான சொகுசு செடான் காராகும். 7-சீரிஸ் மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டான 760 எல்ஐ ஷாருக்கானிடம் உள்ளது.

4. பிஎம்டபிள்யூ 6-சீரிஸ் கன்வெர்டபிள்
பிஎம்டபிள்யூவின் இந்த 2-கதவு ட்ராப்-ஹெட் கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. இதற்கு பதிலாக இசட்4 ரோட்ஸ்டரை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டுவந்தது. ஷாருக்கான் ஆரம்பத்தில் வாங்கிய சொகுசு கார்களுள் ஒன்று 6-சீரிஸ் கன்வெர்டபிள் ஆகும். இதில் 4.4 லிட்டர் இரட்டை-டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

5. பிஎம்டபிள்யூ ஐ8
என்ன ஒரே பிஎம்டபிள்யூ கார்களாக வருகின்றன என நீங்கள் கேட்பது புரிகிறது. ஏனெனில் ஷாருக்கானுக்கு பிஎம்டபிள்யூ கார்கள் என்றாலே கொள்ளை பிரியம். அதற்கு ஐ8 மாடல் சிறந்த உதாரணமாகும். ஏனென்றால், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காரான இது குறுகிய காலத்திற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

6. ஆடி ஏ8 எல்
ஜெர்மனியை சேர்ந்த ஆடி உருவாக்கிய மிகவும் தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக ஏ8 எல் காரை சொல்லலாம். இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த இந்த ஆடி சலூன் பிறகு முற்றிலும் புதிய மாடர்ன் தோற்றத்தில் விற்பனைக்கு வந்தது. ஏ8 எல் மாடலின் டீசல் வெர்சனை ஷாருக்கான் பயன்படுத்தி வருகிறார். இதில் 4.2 லிட்டர் வி8 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

7. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்
லக்சரி ஆஃப்-ரோடு வாகனங்களுக்கு லேண்ட் ரோவர் பிராண்ட் உலகளவில் பிரபலமானதாக விளங்குகிறது. இத்தகைய பிராண்டிலும் ஷாருக்கான் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை கொண்டுள்ளார். வெள்ளை நிற பெயிண்ட்டில் ஷாருக்கானிடம் உள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

8. டொயோட்டா லேண்ட் க்ரூஸர்
மேற்கண்ட லேண்ட் ரோவர் காரை போன்று ஆஃப்-ரோடு பயணத்திற்கு ஏற்றதாக விளங்கும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பெரும்பாலான சினிமா பிரபலங்களிடம் உள்ளது. ஷாருக்கானிடம் லேண்ட் க்ரூஸரின் பழைய வெர்சன் உள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் பிரபலமானதாக விளங்கும் லேண்ட் க்ரூஸரில் 4.5 லிட்டர் வி8 டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

9. மிட்சுபிஷி பஜேரோ
நடிகர் ஷாருக்கான் தனது கேரேஜில் வைத்துள்ள பழமையான கிளாசிக் கார்களுள் மிட்சுபிஷி பஜேரோவும் ஒன்றாகும். இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த இந்த மிட்சுபிஷி வாகனம் தற்சமயம் தயாரிக்கப்படுவதில்லை. ஷாருக்கானிடம் உள்ள பஜேரோவில் 2.8 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

10. ஹூண்டாய் க்ரெட்டா
இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸின் அம்பாசடராக இருக்கும் நடிகர் ஷாருக்கானிடம் ஏகப்பட்ட ஹூண்டாய் கார்கள் உள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பது 2ஆம் தலைமுறை க்ரெட்டா ஆகும். 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய தலைமுறை க்ரெட்டா காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஷாருக்கான் தான் வெளியீடு செய்து வைத்தார்.


Click it and Unblock the Notifications