பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

மிகவும் பாதுகாப்பான டாடா காரின் விற்பனை அமோகமாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக டாடா பன்ச் (Tata Punch) உருவெடுத்து விட்டது. மினி எஸ்யூவி ரகத்தை சேர்ந்த காரான இதன் டிசைன் 'ஹேண்ட்சம்' ஆக இருக்கிறது. அத்துடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் இடவசதியும் சிறப்பாக உள்ளது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய சந்தையில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக டாடா பன்ச் திகழ்கிறது. ஆம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா பன்ச் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் அமோகமாக இருந்து வருகிறது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 10,132 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. அதற்கு முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது இது சிறிய வீழ்ச்சிதான். இருந்தாலும் இது மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,526 பன்ச் கார்களை விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 10,132 என சற்றே சரிந்துள்ளது. இது 3.74 சதவீத சரிவாகும். இருந்தாலும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இது சிறிய சரிவுதான். வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் இல்லை. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்திய சந்தையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே வருடாந்திர ஒப்பீட்டை செய்ய இயலாது. இந்திய சந்தையில் தற்போது குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி கார்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம். தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அது 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

ஒரே ஒரு இன்ஜின்தான் என்றாலும், டாடா பன்ச் காரில் 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் என 2 கியர் பாக்ஸ் தேர்வுகளை டாடா பன்ச் கார் பெற்றுள்ளது. இந்த மினி எஸ்யூவி காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய இன்ஜின் தேர்வை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்திய சந்தையில் டாடா பன்ச் காரின் விற்பனை எதிர்பார்த்தபடி மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் கூடுதல் இன்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், இன்னும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர முடியும். இதன் மூலம் டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இதுதவிர பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது தன்வசம் வைத்துள்ளது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

இதேபாணியில் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டால், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை விட டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது விஷயம் ஆகும்.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 5.83 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலை நிர்ணயமும் கூட டாடா பன்ச் காரின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பாதுகாப்பான டாடா காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே 'புக்' பண்ணீருவீங்க!

டாடா பன்ச் காருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளதால், அந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் சுமார் 3-4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும், டெலிவரிக்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, May 16, 2022, 13:00 [IST]
English summary
10132 units of tata punch sold in april 2022 check full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+