ஒட்டுமொத்த இந்தியாவும் சிஎன்ஜி-க்கு மாறபோகுதா? அடுத்த வருஷம் 12 சிஎன்ஜி கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

2022 ஆம் ஆண்டை போலவே இந்தியாவில் 2023லும் எண்ணற்ற சிஎன்ஜி கார்களை வாகன உற்பத்தியாளர்கள் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றனர். அந்தவகையில், இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் 12 சிஎன்ஜி கார்கள் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

சிஎன்ஜி கார்களுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் என்னமோ வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் பிரபலமான கார் மாடல்களை சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பெரும்பாலான கார் மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சிஎன்ஜி கார்கள் போதாதென்று இன்னும் சில மாடல்களிலும் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

சிஎன்ஜி

மாருதி சுஸுகி மட்டுமில்லைங்க டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், கியா மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் பிரபலமான கார் மாடல்களை விரைவில் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றன. இந்த நிறுவனங்களுடன் சேர்த்து ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல சிட்ரோன் மற்றும் ஸ்கோடா நிறுவனமும் அதன் சிஎன்ஜியால் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்களின் எந்த கார் மாடல்களை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி:

மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே நிறைய கார் மாடல்களை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் தனது புதிய வருகையான பிரெஸ்ஸாவையும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் வருகை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அமைய இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே மாருதி சுஸுகி இதில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த வெர்ஷன் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 25 கிமீ தொடங்கி 30 கிமீ வரையில் மைலேஜ் தருமாம். இதனால்தான் இந்த காருக்கு இப்போது எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ்:

நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல கார் மாடல்களான பஞ்ச், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய கார் மாடல்களிலேயே சிஎன்ஜி தேர்வை அடுத்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஏற்கனவே இந்த கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களின் சோதனை ஓட்டம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், கட்டாயம் இதன் 2023இல் அரங்கேறிவிடும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி கார்களை மட்டுமில்லைங்க எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய்:

டாடா மோட்டார்ஸை போலவே ஹூண்டாய் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் மிகப் பெரிய சிஎன்ஜி கார் பிளானைக் கொண்டுள்ளது. நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான கிரெட்டா, வென்யூ, அல்கஸார் ஆகிய கார் மாடல்களையே சிஎன்ஜி ஆப்ஷனில் 2023 இல் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்திலும் ஃபேக்டரி ஃபிட் சிஎன்ஜி கிட்டே பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஹூண்டாய் நிறுவனம் தற்போதையே நிலவரப்படி அதன் அவுரா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகிய இரு கார் மாடல்களிலேயே சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டொயோட்டா:

டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக இன்னோவா கிரிஸ்டா இருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே நிறுவனம் சிஎன்ஜி தேர்வை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் எனும் சூப்பரான கார் மாடலையும் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங்குகள் நாட்டில் தொடங்கிவிட்டன. இது ஓர் மிக அதிகம் மைலேஜ் தரும் கார் ஆகும். இதற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை இன்னோவா ஹைகிராஸில் டொயோட்டா பயன்படுத்தி இருக்கின்றது. வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த காரை இப்போதே விற்பனையாளர்களுக்கு டொயோட்டா அனுப்பி வைக்கத் தொடங்கிவிட்டது.

சிட்ரோன்:

சிட்ரோன் நிறுவனத்தின் மலிவு விலை காராக சி3 இருக்கின்றது. இந்த காரையே நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமின்றி சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் வருகை 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அரங்கேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்ரோன் நிறுவனம் இதே கார் மாடலை 7 சீட்டர் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கோடா:

ஸ்கோடா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் குஷாக்-ம் ஒன்று. இந்த கார் மாடலையே ஸ்கோடா நிறுவனம் விரைவில் சிஎன்ஜி தேர்வில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த காரின் வருகை பற்றிய எந்தவொரு தகவலையும் ஸ்கோடா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், சந்தையின் எதிர்பார்ப்பு இந்த காரின்மீது மிக அதிகமாக உள்ளது. வழக்கமான பெட்ரோல் வேரியண்டைக் காட்டிலும் ரூ. 1 லட்சம் அதிக விலையில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2022, 10:57 [IST]
English summary
12 cng cars waiting to launch in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+