ஆல்டோ 800 உட்பட 17 கார்களை நிறுத்தப்போறாங்களா? எதுக்குன்னு தெரியுமா?
இந்தியாவில் பிஎஸ்6 கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டமாக ரியல் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாடு வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தற்போது விற்பனவையாகி வரும் 17 கார்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.இதைப் பற்றிய விளக்கமான செய்தியைத் தான் இங்கே காணப்போகிறோம்.
இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டிற்காக பிஎஸ்6 கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்த பிஸ்6 கட்டுப்பாட்டின்படி இந்தியாவில் உள்ள கார்களிலிருந்து வெளியேறும் மாசு அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்டமாக ஆர்டிஇ என்ற ஒரு புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. அதாவது ஆர்டிஇ என்பது ரியல் டிரைவிங் எமிஷன் ஆகும். இது வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதாவது தற்போது உள்ள வாகனங்களில் வாகனம் தயாரிக்கப்படும் போது எமிசன் டெஸ்ட் செய்யப்படும். அப்பொழுது கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் மட்டும் போதும். ஆனால் நாளடைவில் அந்த கார் பயன்படுத்தப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாசுவை வெளியேற்றுகிறது. இதைக் கட்டுப்படுத்தவே இந்த ஆர்டிஇ கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இதன்படி வரும் 2023 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் காரிலிருந்து எப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசு வெளியாகிறதோ அப்பொழுது எல்லாம் டிரைவருக்கு சிக்னல் தர வேண்டும்.
இப்படியாக சிக்னல் கொடுத்தால் டிரைவர் உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல முடியும். இதற்காக எப்பொழுதும் மாசு அளவை கண்காணிக்கும் கருவியை புதிய கார்களில் பொருத்த வேண்டும். இது தான் இந்த ஆர்டிஇ கட்டுப்பாடு சொல்லும் விஷயம். இதை கார்களில் பொருத்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருக்கும் சில இன்ஜின்கள் இந்த ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்கு ஏற்ற இன்ஜின்கள் கிடையாது. இதனால் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வரும் போது இந்த இன்ஜின்களை கொண்ட கார்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்த ஆர்டிஇ கட்டுப்பாட்டில் பெரிய அளவில் பாதிக்கப்படப்போவது டீசல் இன்ஜின்கள் தான். ஹூண்டாய் ஐ20, 5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா டபிள்யூஆர்-வி, டாடா ஆல்ட்ராஸ், மஹிந்திரா மொராஸோ, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய கார்களில் டீசல் இன்ஜின் வேரியன்ட்கள் இந்த ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்காக நிறுத்தப்பட அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இந்த இன்ஜின்களை ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்குத் தகுந்தார் போல மாற்றுவது அந்நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த கார்களை கைவிடும் முடிவை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
இந்த ஆர்டிஇ கட்டுப்பாட்டில் டீசல் இன்ஜின் கார்கள் மட்டுமல்ல சில பெட்ரோல் இன்ஜின் கார்கள் கூட சிக்கலை சந்திக்கிறது. இதனால் சில பெட்ரோல் இன்ஜின் கார்கள் கூட விற்பனை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. மஹிந்திரா கேயூவி100, ஸ்கோடா ஆக்டவியா, டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா, ஸ்கோடா சூப்பர்ப், நிஸான் கிக்ஸ், ரெனால்ட் க்விட், மாருதி சுஸூகி ஆல்டோ 800 இந்த கார்களில் தற்போது உள்ள பெட்ரோல் இன்ஜினை ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்கு மாற்றுவதும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இதனால் இந்த கார்களும் நிறுத்தப்படலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆல்டோ 800 கார் இந்த பட்டியலில் இருப்பது தான். இந்த கார் நீண்ட ஆண்டுகளாக மக்களின் ஆதரவை பெற்ற காராக இருந்தாலும் தற்போது மாருதி நிறுவனம் 0.8 லிட்டர் இன்ஜினில் வெளியிடும் ஒரே கார் இது தான். அதனால் இந்த இன்ஜினை மேம்படுத்துவது அந்நிறுவனத்திற்கு நஷ்டத்தைத் தான் ஏற்படுத்தும். அதனால் அந்த காரின் விற்பனையையே நிறுத்த முடிவு செய்துள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கார்களின் விற்பனையை நிறுத்த முடிவு செய்கிறது என்றால் தற்போது இந்த இன்ஜின்கள் அதிகமாக மாசுவை வெளியிடுகிறது என அர்த்தம் கிடையாது. இந்த இன்ஜின்களில் மாசு வெளியேற்றும் கருவியைப் பொருத்துவதற்கு அந்நிறுவனம் பெரும் தொகையைச் செலவிட வேண்டும். இப்படியாகச் செலவிட்டாலும் அதன் விற்பனையில் அந்த செலவை ஈடுகட்ட முடியாது. இதற்காக செலவிடப்பட்டால் அந்த பணம் வீணாகப் போய்விடும்.
இதனால் அந்த இன்ஜின்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக அந்த கார்களின் விற்பனையை மொத்தமாக நிறுத்திவிட்டு புதிய கார்களை உருவாக்குவதற்காக மாற்றிவிட கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இப்படியாக புதிய கார்கள் தயாரிக்கப்பட்டால் மார்கெட்டிற்கு என்ட்ரி லெவல் முதல் அதிக பட்ஜெட் வரை பல புதிய கார்கள் களம் இறங்கும். ஆனால் மேலே சொன்ன கார்கள் படிப்படியாக இந்தியா சாலைகளிலிருந்து காணாமலேயே போய்விடும்.
இந்த ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் இப்படியாக கார்களை நிறுத்தும் முடிவை எடுத்துவிட்டால் இது மறைமுகமாகப் பயன்படுத்த கார் மார்கெட்டை பாதிக்கும். யூஸ்டு டீசல் கார்களுக்கான விலை மிக வேகமாகக் குறையத் துவங்கிவிடும். ஆனால் மேலே சொன்ன கார்களின் பட்டியல் எல்லாம் தற்போது உள்ள கண்டிஷன் படி ஆர்டிஇக்கு தகுதியில்லாத இன்ஜின்களை கொண்ட கார்கள் தான். இதை நிறுத்தப்போவதை அதிகாரப்பூர்வமாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடவில்லை. எதிர்காலத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த முடிவை மாற்றலாம்.


Click it and Unblock the Notifications








