அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

இந்திய சந்தையில் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள 2 புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

ஜூன் மாதத்தின் இறுதி கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டுள்ளோம். இந்த சூழலில், இந்திய சந்தையில் அடுத்த வாரம் 2 புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவை இரண்டுமே எஸ்யூவி கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவை இரண்டுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகிய கார்களை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்த 2 புதிய கார்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் சுருக்கமாக வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N)

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் இந்திய சந்தையில் வரும் ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் விற்பனைக்கு கிடைக்கும். இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் ஸ்கார்பியோ காரின் இந்த மேம்படுத்தப்பட்ட புதிய மாடல், 'ஃப்ரெஷ்' ஆன டிசைன் அம்சங்களை பெற்றுள்ளது.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்டியரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்கள், அட்ரினாக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சோனி மியூசிக் சிஸ்டம் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த எஸ்யூவி காரின் முன் வரிசையில் வெண்டிலேட்டட் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

இதுதவிர ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்டோரேஜ் வசதி உடன் முன் பக்க ஆர்ம்ரெஸ்ட், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகளையும் புதிய ஸ்கார்பியோ-என் காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் கிடைக்கும்.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (2022 Maruti Suzuki Brezza)

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக உள்ள பெயர்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா. இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. 2022 பிரெஸ்ஸா கார் இந்திய சந்தையில் வரும் ஜூன் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

அத்துடன் 2022 பிரெஸ்ஸா காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, 2022 பிரெஸ்ஸா காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

விற்பனையில் இருந்து வெளியேறவுள்ள பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா டிசைனில் பல்வேறு அப்டேட்களை பெற்றுள்ளது. அத்துடன் இந்த புதிய மாடலில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்பட பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுக்கு, 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனையில் மிக கடுமையான சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், பிரெஸ்ஸா காரின் புதிய மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு விதங்களில் மேம்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் லான்ச் ஆகுது... இந்த 2 கார்களுக்குமே நிறைய பேர் வெயிட்டிங்... என்னென்ன கார்னு தெரியுமா?

பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 போன்ற கார்களின் 2022 மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது பிரெஸ்ஸா காரின் புதிய மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பாண்டு மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள கார்களின் பட்டியலில் இன்னும் பல்வேறு புதிய மாடல்கள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 21, 2022, 20:56 [IST]
English summary
2 new car launches next week mahindra scorpio n 2022 maruti suzuki brezza
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+