எலெக்ட்ரிக் கார் உலகை அடக்கி ஆளும் டாடா நிறுவனம்.. ஒரே ஆண்டில் இவ்வளவு வளர்ச்சியா?
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்தம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையானது? எந்தெந்த நிறுவனங்களின் கார்கள் எவ்வளவு விற்பனையானது? எந்த நிறுவனம் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. முழு விபரங்களை இந்த செய்தியில் காணலாம் வாருங்கள்

தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மக்கள் பலர் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற யோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான எலெக்ரிக் கார்களின் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் 2150 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் மொத்தம் 597 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியிருந்தது. இது ஒரே ஆண்டில் 260.13 சதவீதம் வளர்ச்சியாகும். இதுவே கடந்த மார்ச் மாதம் மொத்தம் 3624 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன, அதை ஒப்பிடும் போது கடந்த ஏப்ரல் மாதம் 40.67 சதவீதம் வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான ஒட்டு மொத்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் 83.81 சதவீத மார்கெட்டை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி, டிகோர் இவி, என் இரண்டு வாகனங்களும் சேர்ந்து மொத்தம் 1802 வானகங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2021 ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும் போது இது 320.05 சதவீத வளர்ச்சியாகும். 2021 ஏப்ரல் மாதம் மொத்தம் 429 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 3435 வாகனம் விற்பனையாகியிருந்தது. அதைக் காட்டிலும் ஏப்ரல் மாதம் விற்பனை 47.54 சதவீதம் குறைவு. மார்ச் மாதம் இந்நிறுவனம் 94.78 சதவீத மார்க்கெட் பங்கை வைத்திருந்தது.

டாடா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் தயாரிக்கும் 2 புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்கள் வெளியானது அதன்படி கர்வ் மற்றும் அவினியா ஆகிய கார்களின் கான்செப்ட் டிசைன் வெளியானது. இதில் டாடா கர்வ் கார் 2024ம் ஆண்டும், அவினியா கார் 2025ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 245 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் 148 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனம் வெறும் 95 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில் தற்போது 157.89 சதவீத வளர்ச்சியை ஏப்ரல் மாதத்தில் பெற்றுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் சார்பில் ZS EV தற்போது விற்பனையில் உள்ளது. இந்தாண்டு இறுதியில் அந்நிறுவனம் ரூ10 லட்சம் ரேஞ்சில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்

| Rank | Model | Apr-22 | Apr-21 | Growth (%) YoY |
| 1 | Tata Nexon / Tigor | 1,802 | 429 | 320.05 |
| 2 | MG ZS EV | 245 | 148 | 65.54 |
| 3 | Hyundai Kona EV | 23 | 10 | 130.00 |
| 4 | BYD e6 | 21 | 0 | - |
| 5 | BMW iX | 17 | 0 | - |
| 6 | Mahindra eVerito | 13 | 4 | 225.00 |
| 7 | Mercedes-Benz EQC | 10 | 4 | 150.00 |
| 8 | Audi e-tron | 8 | 0 | - |
| 9 | Porsche Taycan | 4 | 0 | - |
| 10 | Jaguar i-Pace | 3 | 1 | 200.00 |
| 11 | Others | 4 | 1 | 300.00 |

பட்டியலில் 3வது இடத்தில் ஹூண்டாய் இந்தியா கார் நிறுவனம் இரக்கிறது. இது கடந்த ஏப்ரல் மாதம் 23 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் வெறும் 10 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போதைய விற்பனை 130 சதவீதம் உயர்வாகும். கடந்த மார்ச் மாதம் 18 கார்களை விற்பனை செய்திருந்தது. இது 27.78 சதவீத உயர்வாகும். இந்நிறுவனம் தற்போது கோனா இவி காரை விற்பனை செய்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் ஐகானிக் 5 என்ற எலெட்ரிக் காரை இந்தாண்டு இறுதிக்குள்ளும், 2028ம் ஆண்டிற்குள் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 225 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021 ஏப்ரலில் மொத்தமே 4 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த மார்ச் மாதம் 18 கார்கள் விற்பனையான நிலையில் ஏப்ரல் மாத விற்பனை 27.78 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.மஹிந்திரா நிறுவனம் இவெரிட்டோ காரை தற்போது மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இகேயூவி100 மற்றும் இஎக்ஸ்யூவி 300 ஆகிய கார்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பிஒய்டி இந்தியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 16.67 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது. மொத்தம் 21 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த பட்டியலில் சொகுசு கார்களும் இடம் பிடித்துள்ளது. பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் iX என்ற காரை எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்து வருகிறது. இது கடந்த ஏப்ரல் மாதம் 17 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் இது விற்பனை எண்ணிக்கையில் 9 ஆக இருந்தது. இந்த காரின் விலை ரூ1.15 கோடியாகும். இந்த நிறுவனம் அடுத்த எலெக்ட்ரிக் காராக ஐ4 காரை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

| Rank | Model | Apr-22 | Mar-22 | Growth (%) MoM |
| 1 | Tata Nexon / Tigor | 1,802 | 3,435 | -47.54 |
| 2 | MG ZS EV | 245 | 95 | 157.89 |
| 3 | Hyundai Kona EV | 23 | 18 | 27.78 |
| 4 | BYD e6 | 21 | 18 | 16.67 |
| 5 | BMW iX | 17 | 9 | 88.89 |
| 6 | Mahindra eVerito | 13 | 18 | -27.78 |
| 7 | Mercedes-Benz EQC | 10 | 6 | 66.67 |
| 8 | Audi e-tron | 8 | 16 | -50.00 |
| 9 | Porsche Taycan | 4 | 3 | 33.33 |
| 10 | Jaguar i-Pace | 3 | 1 | 200.00 |
| 11 | Others | 4 | 5 | -20.00 |

மெர்சிடிஸ் இந்தியா நிறுவனமும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் இக்யூசி என்ற காரை எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 10 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 ஏப்ரல் மாத விற்பனையைக் காட்டிலும் 150 சதவீத வளர்ச்சியாகும். இதே கார் கடந்த மார்ச் மாதம் வெறும் 6 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது

அடுத்ததாக ஆடி இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடந்த ஏப்ரல் மாதம் சற்று சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 8 கார்களை மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் 16கார்கள் விற்பனையாகியிருந்தன. இந்நிறுவனம் இட்ரான், இட்ரான்ஜிடி ஆகியோர் கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இரண்டின் விலையும் ரூ1 கோடிக்கும் மேல்

அடுத்தாக போர்ஷே நிறுவனம் மொத்தம் 4 டேக்கன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தது. இது மார்ச் மாதம் வெறும் 3 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விலை ரூ1.5 கோடியாகும்.
அடுத்ததாக ஜாக்குவார் நிறுவனம் ஐ-பேஸ் என்ற காரை எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 3 கார்கள் விற்பனையாகியுள்ள. இதுவே கடந்த மார்ச் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்களில் தலா ஒரு கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இது தவிர மற்ற நிறுவனங்களில் எலெக்ட்ரிக் கார்கள் மொத்தம் 4 கார்கள் விற்பனையாகியுள்ள. இதுவே கடந்த மார்ச் மாதம் இந்த கேட்டகிரியில் 5 கார்கள் விற்பனையாகியிருந்தன. ஒரே மாதத்தில் 20 சதவீத சிரிவை இந்த கேட்டகிரி சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications








