இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்தது ஆடி க்யூ7 சொகுசு கார்! சொகுசு அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

ஆடி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட க்யூ7 சொகுசு எஸ்யூவி ரக காரை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் வருகை குறித்த முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

சொகுசு உற்பத்தி நிறுவனம் ஆடி அதன் புதுப்பிக்கப்பட்ட க்யூ7 சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரு விதமான வேரியண்டுகளில் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி ஆகிய வேரியண்டுகளிலேயே க்யூ7 விற்பனைக்குக் கிடைக்கும்.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இவை இரண்டில் பிரீமியம் ப்ளஸ் வேரியண்டே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 79,99,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உயர்நிலை இடத்தில் டெக்னாலஜி வேரியண்ட் இருக்கின்றது. இதற்கு ரூ. 88,33,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஆடி நிறுவனம் க்யூ7 சொகுசு காரின் விற்பனையை கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுத்தியது. புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்தே இக்காரின் விற்பனையை நாட்டில் ஆடி நிறுத்தியது. இந்த நிலையிலேயே இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இக்காரை மீண்டும் நம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது ஆடி நிறுவனம்.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

புதுப்பித்தலின் அடிப்படையில் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் சில புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உருவம் மற்றும் ஸ்டைலில் எந்த மாற்றத்தையும் ஆடி மோற்கொள்ளவில்லை.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

முன் பக்கத்தில் பெரிய, எண்கோண, ஒற்றை-பிரேம் கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புத்தாக்கம் செய்யப்பட்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேர மின் விளக்குடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பின் பக்கத்திலும் லேசாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குரோம் ஸ்ட்ரிப், பெரிய ஏர் இன்டேக் மற்றும் ஷார்ப்பான க்ரீசஸ் மற்றும் பெரிய உருளை வடிவ பம்பர் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதுமட்டுமில்லைங்க இந்த காரில் எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 10.1 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 இன்ச் அளவுள்ள தொடுதிரை (எச்பிஏசி கன்ட்ரோல்களுக்காக மற்றும் பிற அட்ஜெஸ்மெண்டுகளுக்காக இது கொடுக்கப்பட்டுள்ளது), ஆடி விர்ச்சுவல் காக்பிட், நான்கு ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பேங்க் மற்றும் ஒலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், ஏர் ஐயோனைசர், ஆம்பிசியன் மின் விளக்கு உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன், பார்க் அசிஸ்ட் ப்ளஸ், பனோரமிக் சன்ரூஃப், டிபார்ச்சர் வார்னிங் வசதி உடன் கூடிய ஸ்டியரிங் அசிஸ்ட், எட்டு ஏர் பேக்குகள், பார்க் அசிஸ்ட் ப்ளஸ் வசதி உடன் கூடிய 360 டிகிரி கேமிரா, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதுமட்டுமின்றி, ஏழு விதமான டிரைவிங் மோட்கள் சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு ஆடி வழங்கியிருக்கின்றது. ஆட்டோ, கம்ஃபோர்ட், டைனமிக், எஃபிசியன்சி, ஆஃப்-ரோடு, ஆல்-ரோடு மற்றும் இன்டிவிசுவல் ஆகிய டிரைவிங் மோட்களே வழங்கப்பட்டுள்ளன.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7... இவ்ளோ அம்சங்கள் வழங்கியிருக்காங்களா! இதோட விலை எவ்வளவு தெரியுமா?

2022 ஆடி க்யூ7 காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் கூடுதலாக இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டும் தானியங்கி கியர்பாக்ஸில் இயங்கும். மேலும், இரண்டும் சேர்ந்து 335 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது மிக அதிக திறன் ஆகும். 5.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 3, 2022, 12:39 [IST]
English summary
2022 audi q7 facelift launched in india here is full details
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+