2022ல எந்த நிறுவனத்தின் எம்பிவி ரக கார் அதிகம் விற்பனையாகி இருக்கு தெரியுமா?.. சர்ப்ரைஸான தகவலை பார்க்கலாமா?

இந்தியாவில் அதிகம் இருக்கைகளைக் கொண்டிருக்கும் கார் மாடல்களுக்கு எப்பவுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்தவகையில், எம்பிவி ரக கார்களுக்கும் மிக சூப்பரான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெரிய உருவம், அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்கலாம் மற்றும் நிறைய லக்கேஜை எடுத்துச் செல்லலாம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த எம்பிவி ரக கார்கள் இந்தியாவில் ஃபேமஸாக காரணமாக இருக்கின்றன. மேலும், இதனாலேயே எம்பிவி ரக கார்கள் அதிக அளவில் நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பிட்ட சில எம்பிவி ரக கார்களுக்கு நாட்டில் செம்ம சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அந்த எம்பிவி ரக கார் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, இந்தியாவில் நடப்பு 2022 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையாகிய எம்பிவி ரக கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். டாப் 5 பெஸ்ட் செல்லிங் எம்பிவி ரக கார்களின் லிஸ்டில் எந்த நிறுவனத்தின் எந்த கார் மாடல் இருக்கின்றது என்பதை பார்க்கலாமா?. வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார்

மாருதி சுஸுகி எர்டிகா:

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நீண்ட நாட்களாக மாருதி சுஸுகி எர்டிகா இருக்கின்றது. இந்த கார் நடப்பாண்டில் மட்டும் (இப்போது வரை) 1 லட்சத்து 21 ஆயிரத்து 541 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இந்த அளவு அதிக எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாகின்ற காரணத்தினாலேயே நாட்டின் பெஸ்ட் செல்லிங் எம்பிவி கார் மாடல்களின் வரிசையில் முதல் இடத்தில் எர்டிகா இருக்கின்றது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 8.35 லட்சம் ஆகும். அதேவேலையில் அதிகபட்சமாக இந்த கார் ரூ. 12.79 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது.

மலிவு விலையில் இந்த கார் விற்கப்பட்டாலும் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட தயாரிப்பாக எர்டிகா காட்சியளிக்கின்றது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. எர்டிகா சிஎன்ஜி அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், இதன் பெட்ரோல் வெர்ஷன் லிட்டருக்கு 20 கிமீ வரையில் மைலேஜ் வழங்கும். இவ்வளவு பெரிய உருவம் கொண்ட கார் இந்த அளவு சூப்பரான மைலேஜ் வழங்குவது ஆச்சரியமே. இதுபோன்று பன்முக சிறப்புகளை இநத் கார் கொண்டிருப்பதாலேயே விற்பனையில் டாப் பிளேசில் எர்டிகா இருக்கின்றது.

கியா கேரன்ஸ்:

கியா நிறுவனம் இந்தியாவில் லேட்டஸ்டாக அறிமுகம் செய்த காராக கேரன்ஸ் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக கார்கள் பலவற்றை பின்னுக்கு தள்ளி தற்போது விற்பனையில் டாப் பிளேசை பிடித்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாம் பெஸ்ட் செல்லிங் எம்பிவி ரக காராகும். நடப்பாண்டு ஜனவரியிலேயே இந்த கார் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகமாகியது. இதற்குள்ளாக 59 ஆயிரத்து 561 யூனிட்டுகள் விற்பனையாகிவிட்டன. இந்த காரை ஒட்டுமொத்தமாக மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பன்முக மோட்டார் தேர்வும், அதிகப்படியான சிறப்பு வசதிகளைக் கொண்டிருப்பதுமே இந்த காரை இந்தியாவின் இரண்டாவது மிக சிறப்பாக விற்பனையாகும் எம்பிவி காராக மாற்றியிருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 18 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மைலேஜ் திறன் 16 கிமீ தொடங்கி 21 கிமீ வரையில் உள்ளது.

டொயோட்டா இன்னோவா:

இந்தியாவில் வெகு நீண்ட நாட்களாக விற்பனையில் இருக்கும் எம்பிவி ரக கார் என்ற பெருமை இன்னோவாவிற்கு உண்டு. மிக சிறந்த பிரீமியம் வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நடப்பாண்டில் மட்டும் 56,533 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அடுத்த ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு வர உள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6:

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரீமியம் தர எம்பிவி ரக காராக எக்ஸ்எல்6 இருக்கின்றது. இந்த கார் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இந்த அதிகபட்ச எண்ணிக்கையின் காரணமாக இந்த கார் நாட்டின் நான்காவது அதிகம் விற்பனையாகும் எம்பிவி-ஆக காட்சியளிக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.29 லட்சம் ஆகும். அதேவேலையில் இதன் உச்சபட்ச விலை ரூ. 14.55 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ரெனால்ட் ட்ரைபர்:

இந்தியாவின் மலிவு விலை எம்பிவி ரக காராக ரெனால்ட் ட்ரைபர் இருக்கின்றது. இந்த கார் 2022 தொடங்கி இப்போது வரை 31 ஆயிரத்து 751 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 5.92 லட்சம் ஆகும். அதேவேலையில் இதன் அதிகபட்ச விலையே ரூ. 8.51 லட்சம்தான். இவை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் ஆகும். 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு 4 ஸ்டார்களைப் பெற்ற வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2022, 8:09 [IST]
English summary
2022 best selling mpv car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+