டுஸான் Vs எக்ஸ்யூவி700 Vs ஹாரியர் Vs ஹெக்டேர் எது பெஸ்ட்?
மார்கெட்டில் புதிதாக வந்துள்ளது. ஹூண்டாய் டுஸான், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டேர், உள்ளிட்ட கார்களில் எது பெஸ்ட் எனக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சிறப்பான விற்பனை மற்றும் நல்ல பெயரை எடுத்த எஸ்யூவி கார்களான டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் ஆகிய கார்களுடன் சமீபத்தில் ஹூண்டாய் டூஸான் காரை ஒப்பீடு செய்யப்போகிறோம். ஹூண்டாய் டுஸான் ஒரு பிரிமியம் கார் இதை எப்படி மற்ற பிரிமியம் அல்லாத கார்களுடன் ஒப்பிட முடியும் என நீங்கள் நினைப்பது புரிகிறது.

இந்த ஓப்பீட்டை பார்க்கும் போத இட்லியை பீட்சாவுடன் ஒப்பிடுவது போலத் தோன்றலாம். ஆனால் உயர் ரக இட்லியின் விலையும் குறைந்த ரக பீட்சாவின் விலையும் கிட்டத்தட்ட ஒரே கேட்டகிரியில் இருக்கிறது. இதனால் இந்த செய்தியில் இந்த கோணத்தில் இந்த ஒப்பீட்டைச் செய்கிறோம்.

டுஸான் கார் 5 சீட்டர் காராக விற்பனையாக்கி வருகிறது. அதன் இதேபோல நாம் ஒப்பீடு செய்யப்போகும் கார்களிலும் 5 சீட்டர் ஆப்ஷன் இருக்கும் கார்களாக பார்த்து ஒப்பீடு செய்துள்ளோம். ஹூண்டாய் நிறுவனம் டுஸான் காரை ரூ25-35 லட்சம் என் விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விலையில் அறிமுகமானால் ஹாரியர், எக்ஸ்யூவி700, ஹெக்டேர் ஆகிய கார்களின் டாப் மாடல் விலையை விட ரூ1 முதல் 5 லட்சம் வரை டூஸான் காரின் பேஸ் மாடல் விலை அதிகமாக இருக்கும்.

அளவு
காரின் அளவை ஒப்பிடும் போது இந்தப்போட்டியில் ஒவ்வொரு காரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்த காராக இருக்கிறது. டாடா ஹாரியர் அகலமாக காராகவும், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 நீளமான காராகவும், எம்ஜி ஹெக்டேர் உயரமான காராகவும், ஹூண்டாய் டுஸான் கார் நீளமான வீல் பேஸ் கொண்ட காராகவும் இருக்கிறது. ஆனால் ஒன்றிற்கு ஒன்று ஒன்று பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

| Dimensions | டுஸான் | எக்ஸ்யூவி 700 | ஹெக்டேர் | ஹாரியர் |
| Length | 4630 மிமீ | 4696 மிமீ | 4655 மிமீ | 4598 மிமீ |
| Width | 1865 மிமீ | 1890 மிமீ | 1835 மிமீ | 1894 மிமீ |
| Height | 1665 மிமீ | 1755 மிமீ | 1760 மிமீ | 1706 மிமீ |
| Wheelbase | 2755 மிமீ | 2750 மிமீ | 2750 மிமீ | 2741 மிமீ |

நீளத்தைப் பொருத்தவரை டுஸான் கார் 4630 மிமீ, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 4696 மிமீ, எம்ஜி ஹெக்டேர் 4655 மிமீ, ஹாரியர் 4598 மிமீ அளவுகளிலும், அகலத்தைப் பொருத்தவரை டுஸான் 1865 மிமீ, எக்ஸ்யூவி 700 1890 மிமீ, எம்ஜி ஹெக்டேர் 1835 மிமீ, ஹாரியர் 1894 மிமீ அளவுகளிலும், உயரத்தைப் பொருத்தவரை டுஸான் 1665 மிமீ, எக்ஸ்யூவி 700 1755 மிமீ, எம்ஜி ஹெக்டேர் 1760 மிமீ, ஹாரியர் 1706 மிமீ, உயரமும், வீல் பேஸை பொருத்தவரை டுஸான் 2755 மிமீ, எக்ஸ்யூவி 700 2750 மிமீ, ஹெக்டர் 2750 மிமீ, ஹாரியர் 2741 மிமீ அளவும் கொண்டதாக இருக்கிறது.

செயல்திறன் மற்றும் அம்சங்கள்
இந்த ஒப்பீட்டு அளவுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் காருக்கு டீசல் இன்ஜினை மட்டுமே வெளியிட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜினை தற்போது தான் டெஸ்ட் செய்து வருகிறது. மற்ற காரகள் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. மஹிந்திரா இரண்டு இன்ஜின்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. எம்ஜி நிறுவனம் பெட்ரோல் வேரியன்டில் மட்டும் ஆட்டோ மற்றும் மேனுவல் கியர் ஆப்ஷன் இருக்கிறது டீசல் இன்ஜினில் ஆட்டோ கியர் இல்லை. டுஸானை பொருத்தவரை ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் உடன் மட்டும் தான் விற்பனைக்கு வரவுள்ளது.

| Specs | டுஸான் | எக்ஸ்யூவி 700 | ஹெக்டேர் | ஹாரியர் |
| Chassis | Monocoque | Monocoque | Monocoque | Monocoque |
| Powertrain | FWD / AWD | FWD / AWD | FWD | FWD |
| Off-road | Multi Terrain Modes | - | Terrain Modes | - |
| Petrol Engine | Nu 2.0L With AT Only | 2.0L TGDi Turbo With MT & AT | - | 1.5L Turbo With MT & AT |
| Power | 155 bhp | 197 bhp | - | 141 bhp |
| Torque | 192 Nm | 380 Nm | - | 250 Nm |
| Diesel Engine | R 2.0L VGT With AT Only | 2.2L CRDi Turbo With MT & AT | 2.0L KryoTec Turbo With MT & AT | 2.0L Turbo With MT Only |
| Power | 185 bhp | 153 bhp / 182 bhp | 168 bhp | 168 bhp |
| Torque | 416 Nm | 360 Nm / 450 Nm | 350 Nm | 350 Nm |
| ADAS | Yes | Yes | No | No |

பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் 197 பிஎச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதுவே எம்ஜி ஹெக்டேர் காரில் 141 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், டுஸானில் 155 பிஎச்பி பவர் மற்றும் 192என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். டீசல்
வேரியன்டை பொருத்தவரை எக்ஸ்யூவி 700 கார் 130/172 பிஎச்பி பவர் மற்றும் 300/370 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஹாரியர் மற்றும் ஹெக்டேர் கார் 168 பிஎச்பி பவர் மற்றம் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் டுஸான் காரை பொருத்தவரை 185 பிஎச்பி மற்றும் 416 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் 197 பிஎச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதுவே எம்ஜி ஹெக்டேர் காரில் 141 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், டுஸானில் 155 பிஎச்பி பவர் மற்றும் 192என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். டீசல்
வேரியன்டை பொருத்தவரை எக்ஸ்யூவி 700 கார் 130/172 பிஎச்பி பவர் மற்றும் 300/370 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஹாரியர் மற்றும் ஹெக்டேர் கார் 168 பிஎச்பி பவர் மற்றம் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் டுஸான் காரை பொருத்தவரை 185 பிஎச்பி மற்றும் 416 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

டுஸான் காரை பொருத்தவரை டீசல் வேரியன் தான் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தும். எக்ஸ்யூவி 700 மற்றும் டுஸான் கார் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை வழங்குகிறது. ஹாரியர் காரில் ஸ்மார்ட் டிராக்ஷன் கண்ட்ரோ ஸ்டெபிலிட்டி மற்றும் டெரைன் மோட்கள் இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் டுஸான் காரின் பேஸ் மாடலிலேயே அதிக வசதிகளை வழங்குகிறது. அதனால் இது பிரிமியம் இல்லா மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுவது. இந்த ஒப்பீடு குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








