டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

இந்திய சந்தையில் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் (Hyundai Venue Facelift) நிறுவனம் முழுமையாக தயாராகி விட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் நாளை (ஜூன் 16) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கிடையே 2022 ஹூண்டாய் வெனியூ கார் டீலர்ஷிப்களுக்கும் வர தொடங்கி விட்டது.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதுதவிர 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய தேர்வுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

கியர் பாக்ஸை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய தேர்வுகள் வழங்கப்படலாம். வெளிப்புற டிசைனை பொறுத்தவரையில், ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய க்ரில் வழங்கப்படவுள்ளது. மேலும் புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் ஆகியவையும் வழங்கப்படவுள்ளன.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

அத்துடன் ஸ்பாய்லர் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தை பொறுத்தவரையில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றை புதிய ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

மேலும் ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி போன்ற வசதிகளும் வழங்கப்படவுள்ளன. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்ற கார்களுக்கு ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் மிக கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களின் புதிய தலைமுறை மாடல்கள் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த கார்களின் புதிய தலைமுறை மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், புதிய மாடல்களின் வருகையால் முன்பை விட வரும் மாதங்களில் போட்டி இன்னும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

இந்த செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் அனைத்து கார்களுக்கும் மிகவும் சவாலான போட்டியாளராக உருவெடுத்துள்ளது. போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், தங்கள் கார்களை அப்டேட் செய்ய வேண்டிய தேவை கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுக்குமே உள்ளது. இதன் காரணமாகவே இந்த செக்மெண்ட்டில் பல்வேறு கார்களின் புதிய மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளன.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

டாடா நிறுவனத்தை பொறுத்தவரையில் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருவது கூடுதல் பலம் சேர்க்கிறது. ஏற்கனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ள நிலையில், வெகு சமீபத்தில் இதன் புதிய வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

டாடா நெக்ஸான் காரால் கடுமையான போட்டி... வெனியூ காரின் புதிய மாடலை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல், டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்(Tata Nexon EV Max) என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டிகோர் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
2022 hyundai venue to be launched in india tomorrow check details here
Story first published: Wednesday, June 15, 2022, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X