இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

ஜீப் (Jeep) நிறுவனத்தின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் (2022 Compass Trailhawk) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜீப் (Jeep), புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் (2022 Compass Trailhawk) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வழக்கமான காம்பஸ் காரைக் காட்டிலும் பன்மடங்கு அதிக சிறப்பு வசதிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அதேவேலையில், மிகவும் கவர்ச்சியான தோற்றத்தையும் இதுக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

காம்பஸ் டிரெயில்ஹாக் ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் கரடு-முரடான பாதைக்கு ஏற்ற வாகனமாக இது காட்சியளிக்கின்றது. ஆஃப்-ரோடு பயன்பாடு மட்டுமின்றி ஆன்-ரோடிலும் மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதற்காக, 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஆல் சீசன் டயர்கள் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி ஹேண்ட்லிங் மற்றும் கம்ஃபோர்ட் ஆகியவற்றிலும் சிறப்பானதாக காட்சியளிக்கும் அம்சங்களையும் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

அறிமுக விலையாக இக்காருக்கு 30 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டிரெயில்ஹாக் காருக்கு கவர்ச்சி சேர்க்கும் வகையில் பன்முக சிறப்பம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மெல்லிய ரக எல்இடி ஹெட்லேம்ப், ரிவைஸ்ட் முன் பக்க க்ரில், ஆன்டி கிளார் கிராஃபிக் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. முழுமையான கருப்பு நிற பம்பர் சில்வர் நிற பேஷ் பிளேட்டுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், கருப்பு நிற அலாய் வீல் மற்றும் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் வீல் ஆர்ச் மற்றும் டூர் சில்களில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுதவிர, ட்யூவல் டோன் பெயிண்ட் ஸ்கீம், 4X4 பேட்ஜ் ஆகியவையும் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை வழக்கமான காம்பஸ் காரில் இருந்து இக்காரை (புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்) மாறுபட்டு காண்பிக்கும் வகையில் இருக்கின்றன. இவற்றுடன், சேர்த்து பின் பக்க பம்பரில் டோவ் ஹூக் ஒன்றும் ரெட் ஹைலைட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

ஜீப் காம்பஸ் காரின் உட்புறம் அதிக பிரீமியம் உணர்வை வழங்கும் வகையில் இருக்கின்றது. டேஷ்போர்டு, இருக்கைகள் உள்ளிட்டவற்றில் இதனை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக டாப் ஸ்பெக் மாடலில் இந்த அம்சங்களை மிக அதிகளவில் பார்க்க முடிகின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

10.25 அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.25 இன்ச் அளவுள்ள ஃப்ளோட்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே) உள்ளிட்டவை டிரெயில்ஹாக் காரில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சங்களாகும்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இவைதவிர, பனோரமிக் சன்ரூஃப், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜிங் வசதி, வென்டிலேடட் முன் பக்க இருக்கைகள், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா ஆகிய உயர் தர தொழில்நுட்ப அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது புதிய காம்பஸ் டிரெயில்ஹாக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 எச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், மிக சிறந்த டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக 9 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸை இக்காரில் ஜீப் கொடுத்துள்ளது. இதுமாதிரியான பரந்தளவிலான சிறப்பு வசதிகளுடனேயே இந்திய சந்தையை வந்தடைந்திருக்கின்றது புதிய ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் கார்.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 10:54 [IST]
English summary
2022 jeep compass trailhawk launched in india at rs 30 72 lakh here is full details
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+