தொடங்கியது 2022 கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

2022 கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

கவாஸாகி நிறுவனம் அதன் புதிய வெர்சிஸ் 650 பைக்கை இந்தியாவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விற்பனைக்குக் அறிமுகப்படுத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இதன் வருகைகுறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அதேவேலையில், பைக்கிற்கான புக்கிங் பணிகளை அது ஏற்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

மேலும், புதிய அப்டேடட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதனால் தற்போது விற்பனையில் இருக்கும் வெர்சிஸ் 650 பைக்கிற்கு அதிக டிஸ்கவுண்டுகளின்கீழ் விற்பனைக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த மாத முடிவிற்குள் பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பைக்கின் டெலிவரி பணிகள் வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

2022 வெர்சிஸ் 650 தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அப்டேட் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் காரணமாக இதன் விலை சற்று உயர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

கவாஸாகி நிறுவனம் அப்டேட்டின் வாயிலாக சில சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கின்றது. நான்கு நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய விண்ட்ஸ்கிரீன், டிஎஃப்டி திரை, ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் இரண்டு லெவல்களில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

இவற்றின் காரணத்தினாலயே கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் விலை பல மடங்கு உயர இருக்கின்றது. இந்த பைக்கின் முன் பக்கமும் லேசாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தோற்றம் நிஞ்ஜா 650 பைக்கை ஒத்தவாறு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

மோட்டார்சைக்கிளில் 649 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 66 பிஎச்பி மற்றும் 61 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரே தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

இந்த மோட்டார் மட்டுமின்றி அதே பழைய சேஸிஸ், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அம்சங்களுடனேயே 2022 கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதேநேரத்தில், லேசான ஸ்டைல் மாற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் சேர்ப்பைப் போல புதிய நிறத் தேர்வில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

இந்த பைக்கின் முன் பக்கத்தில் அப்சைடு-டவுன் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 17 அங்குல வீல்களே வெர்சிஸ் 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் அம்சமாக இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தொடங்கியது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கான புக்கிங் பணிகள்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

மேலும், ட்யூவல் பாட் ஹெட்லேம்ப் செட்-அப், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 21 லிட்டர் ஃப்யூவல் டேங்க் ஆகியவை சிறப்பம்சங்களாக அந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும். தற்போதைய நிலவரப்படி இந்த பைக் ரூ. 7.15 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகின்றது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 2022 வெர்ஷன் ரூ. 7.50 லட்சம் அல்லது ரூ. 7.60 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 15, 2022, 17:55 [IST]
English summary
2022 kawasaki versys 650 launch details
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+