ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் என்ன விலையில் விற்பனைக்கு வரும்? சொகுசு வாகன பிரியர்களுக்கு விருந்தளிக்கும் தகவல்!
2022 ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் (2022 Land Rover Range Rover Sport) கார் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர், அண்மையில் அதன் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆடம்பர காரை உலகளழில் வெளியீடு செய்தது. வெகு விரைவில் இக்காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட காரின் விலையை சத்தமே இல்லாமல் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

ரூ. 1.64 கோடி என்ற அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும். இந்த காரை நடப்பாண்டின் இறுதிக்குள் லேண்ட் ரோவர் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனைக்கு வந்த வெகு விரைவிலேயே காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் இக்காரின் வருகையை பெரிதும் ்எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நான்கு விதமான வேரியண்டுகளில் புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி சொகுசு கார் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. டைனமிக் எஸ்இ (Dynamic SE), டைனமிக் எச்எஸ்இ (Dynamic HSE), ஆட்டோபையோகிராஃபி (Autobiography) மற்றும் ஃபர்ஸ்ட் எடிசன் (First Edition) இவையே அந்த நான்கு வேரியண்டுகள் ஆகும்.

நான்கு வேரியண்டுகளிலுமே பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பன்முக உயர் ரக தொழில்நுட்ப வசதிகளுடன் அக்கார் விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவேதான் இதன் வருகையை சொகுசு வாகன பிரியர்கள் பெரிதும் எதிர்நோக்கி காக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக, இதனை நிறுவனம் மிக சிறந்த ஸ்போர்ட் வசதிகள் கொண்ட காராக உருவாக்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் புத்தம் புதிய வி8 ட்வின் டர்போ மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியும் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரில் வழங்கப்பட இருக்கின்றது.

இரண்டும் சேர்ந்து லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரை வேற லெவல் திறன் வெளியேற்றும் காராக மாற்றியிருக்கின்றது. இக்காரின் டி350 தேர்வில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினுடன் கிடைக்க இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 350 பிஎச்பியையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இதன் இயக்கத்தை மேலும் சிறப்பானதாக மாற்ற 8 ஸ்பீடு இசட்எஃப் தானியங்கி டிரான்ஸ்மிஷன் மற்றும் இன்டலிஜன்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படும். இக்கார் மாடலின் பி400-லேயே மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி வழங்கப்படுகின்றது. இத்துடன், 400 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் மோட்டாரும் வழங்கப்படும்.

மேலே இரண்டைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எஞ்ஜினுடன் கிடைக்க இருக்கின்றது பி510இ. இதில், 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட உள்ளது. 105 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 35.2 kWh பேட்டரி பேக் கூடுதல் அம்சங்களாக பி510இ-இல் வழங்கப்படும். இதுவே இந்த தேர்வின் மிக சிறந்த அம்சமாக உள்ளது.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவையே அந்த காரை தொழில்நுட்ப அம்சங்கள் லோட் செய்யப்பட்ட வாகனமாக காட்சியளிக்கச் செய்கின்றது. இதற்கேற்ப பெரிய பெரிய திரைகள் காருக்குள் வழங்கப்பட்டுள்ளது. அவை, காரை விமானத்தின் கேபினை தோற்றுவிக்கின்றன.

13.1 அங்குல வளைவான தொடுதிரை ஒன்றும், டிரைவருக்கான 13.7 அங்குல திரை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை உயர் கிராஃபிக் வசதிகள் கொண்டது ஆகும். இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் அலெக்ஸா ஆகிய தொழில்நுட்பங்கள் இந்த திரைகளில் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, காரின் இருக்கையில் மூன்லைட் குரோம் வண்ண போர்வையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மெரிடியன் ஆடியோ ஸ்பீக்கர்கள் பின்பக்க கதவுகள் மற்றும் ஹெட்ரெஸ்ட்டுகளிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவை பார்டி ஹாலில் இருப்பதைப் போன்ற மியூசிக் அனுபவத்தை வழங்க உதவும்.

மிக முக்கியமானதாக காரின் கவர்ச்சியான தோற்றம் இருக்கின்றது. இக்காரை சிற்பி செதுக்கியதைப் போல் காட்சியளிக்கின்றது. முற்றிலும் கவர்ச்சியான அம்சங்களால் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதற்கேற்ப மனதை திருடும் ஸ்டைலில் க்ரில், டிஜிட்டல் எல்இடி மின் விளக்குகள், பகல்நேரத்தில் ஒளிரும் லைட்டுகள் உள்ளிட்டவை காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காரின் பக்கவாட்டு பகுதியை கவர்ச்சியானதாக மாற்றும் வகையில் 21 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் தேர்வாக 22 அங்குல அலாய் வீலையும் லேண்ட் ரோவர் இக்காருடன் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் உயர் ரக தொழில்நுட்பங்களுடனேயே விரைவில் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








