எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Recommended Video

Kia Carens: Driving Safe Cars | 10 Standard Safety Features For A Stress-free Journey

இந்த காரின் விபரத்தையும் அந்த அப்டேட்டையும் இங்கே காணலாம் வாருங்கள்.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் கடந்த வாரம் ஸ்கார்பியோ காரை அப்டேட் செய்து ஸ்கார்பியோ கிளாசிக் காராக அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே கடந்த மாதம் ஸ்கார்பியோ-என் கார் அறிமுகமாகி விற்பனையாகி வரும் நிலையில் ஸ்கார்பியோ கிளாசிக் காரும் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

இந்த புதிய ஸ்கார்பியோ கிளாசிக் கார் ஏற்கனவே விற்பனையாகி வந்த ஸ்கார்பியோ காரின் அப்டேட்டட் வெர்ஷன் என்பது நமக்குத் தெரியும். இதுவும் புதிய ஸ்கார்பியோ என் காரும் ஒரே நேரத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 5 நிறங்களில் S மற்றும் S11 ஆகிய 2 வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இந்த புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரில் உளு்ள அம்சங்கள் குறித்த விபரங்களை காணலாம்.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

இந்த 2022 புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை பொறுத்தவரைப் பழைய காரில் உள்ள அதே அம்சங்கள் தான் ஆனால் அதில் சில அப்டேட்டகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பக்கத்தில் புதிய கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 க்ரோம் ப்னீஷ் கொண்ட ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் உள்ள பம்பரில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃபாக் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள எல்இடி லைட்கள் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய டிசைன் அட்டகாசமாக இருக்கிறது. இது போக 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறமும் டூயல் டோன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

இந்த இன்ஃபோடெயின் மென் சிஸ்டத்தில் வயர்லெஸ் போன் மிரரிங் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் கார் ஓட்டும் போது டச் ஸ்கிரீனிலேயே உங்கள் செல்போனை பயன்படுத்த முடியும். மிகப் பயனுள்ள வசதியாகக் குறிப்பிடப்படுகிறது. இது போக காரில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

இந்த ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தால் காரின் உள்ளே ஏசி வெளிப்புறத்தில் உள்ள கிளைமேட்டை கணக்கிட்டு அதற்குத் தகுந்தார் போல் செயல்பட்டு உட்புறம் பயணிகளைச் சொகுசாகப் பயணம் செய்ய வைக்கும். இது போக இந்த காரில் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரப் பயணங்களில் இந்த க்ரூஸ் கண்ட்ரோல் உதவும், இது போக டிரைவரின் வசதிக்காக டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை மொத்தம் 2.2 லிட்டர், 4 சிலிண்டர், எம் ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் முந்தைய தலை முறை காரிலும் பொருத்தப்பட்டிருந்தது. இன்ஜினில் எந்த வித அப்டேட்டும் இல்லை. இந்த இன்ஜின் 130 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை எப்ப வெளியாகும் தெரியுமா?

இந்த புதிய 2022 ஸ்கார்பியோ கிளாசிக் காருக்காக ஸ்கார்பியோ ரசிகர்கள் பலர் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் இந்த காரின் விலை குறித்த விபரங்கள் நாளை (20ம் தேதி) வெளியிடப்படட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை புக் பண்ண நீங்க ரெடியா? இந்த கார் குறித்த உங்கள் விபரங்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, August 19, 2022, 11:06 [IST]
English summary
2022 Mahindra Scorpio classic price announcement date released
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+