Just In
- 38 min ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 4 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- 4 hrs ago
தீப்பொறி வந்தாலும் பரவாயில்லை... ரயில் சக்கரங்கள் இரும்பினால் செய்ய படுவதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!
- 5 hrs ago
மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 ஆயிரம் கொடுத்தாலே போதும்!
Don't Miss!
- News
மின்சார சட்டத் திருத்தத்தால் மாநில உரிமையைப் பறிப்பதா? வாபஸ் பெற மத்திய அரசுக்கு சீமான் வேண்டுகோள்!
- Movies
இந்தியன் 2 படத்தில் இணைகிறாரா சத்யராஜ்?... இந்த ரோலில் தான் நடிக்க போகிறாரா?
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மாருதி ஆல்டோவை அட்டகாசமா ரெடி பண்ணியிருக்காங்க... காரின் படங்களை பார்த்து மெய்மறந்து நிற்கும் வாகன பிரியர்கள்!
2022 மாருதி சுஸுகி கே10 (Maruti Alto K10) கார் அட்டகாசமாக ரெடியாகியிருப்பதை வெளிக்காட்டும் வகையில் அக்கார் பற்றிய படங்கள் இணையத்தில் தற்போது கசிந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் புதிய கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆர்வத்தின் அடிப்படையிலேயே அண்மையில் புதிய பலினோ, பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில கார் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் அது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் விரைவில் ஆல்டோ கே10 (Alto K10) காரின் புதிய வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனின் படம் மற்றும் வேரியண்டின் விபரங்களே தற்போது வெளியாகியுள்ளன.

இந்த மாத இறுதிக்குள் புதிய ஆல்டோ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு நிறுவனம் ஹேட்ச்பேக் காரை கடுமையான சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக கார்குறித்த படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வெளியாகியிருக்கும் விபரங்களின்படி ஆல்டோ கே10 ஒட்டுமொத்தமாக 12 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. எஸ்டிடி (STD), எஸ்டிடி (ஓ) (STD-O), எல்எக்ஸ்ஐ (LXI), எல்எக்ஸ்ஐ (ஓ) (LXI-O), விஎக்ஸ்ஐ VXI, விஎக்ஸ்ஐ (ஓ) (VXI-O), விஎக்ஸ்ஐ பிளஸ் (VXI+) மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் (ஓ) (VXI+ -O) ஆகிய வேரியண்டுகள் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடனும், விஎக்ஸ்ஐ (VXI), விஎக்ஸ்ஐ (ஓ) (VXI-O), விஎக்ஸ்ஐ பிளஸ் (VXI+) மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் (ஓ) (VXI+ -O) ஆகிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் ஆல்டோ விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

மாருதி புதிய ஆல்டோவை ஹார்டெக்ட் மாடுளர் பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே மாருதி நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, பலினோ மற்றும் எர்டிகா காரை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. புதிய பரிணாமமாக இக்காரில் பன்முக சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்பைக் காட்டிலும் தற்போது சற்று பெரிய உருவத்தில் அது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

எண்களின் அடிப்படையில் கார் உருவாக்கப்பட்டிருக்கும் அளவை கூற வேண்டுமானால் 3,530 மிமீ நீளத்திலும், 1,490 மிமீ அகலகத்திலும், 1,520 மிமீ உயரத்திலும் மற்றும் 2,380 மிமீ வீல்பேஸிலும் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சைஸ் அதிகரித்திருப்பதால் காரின் எடையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதன் ஒட்டுமொத்த எடை 1,150 கிலோவாகும்.

டிசைனிலும் பல்வேறு மாற்றங்களை மாருதி செய்திருக்கின்றது. ஆகையால், இது ஆல்டோதானா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பெரிய க்ரில் காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து காரின் பின் பக்கத்திலும் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது. புதிய டெயில் லேம்ப் மற்றும் டிசைனை பின் பகுதி பெற்றிருக்கின்றது.

இதேபோல் காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்களை மாருதி செய்திருக்கின்றது. இதனை முழுமையாக மாற்றியமைத்துவிட்டதே என்றே கூறலாம். இதுபோன்ற காரணங்களால்தான் இக்கார் மாருதி ஆல்டோதானா என்கிற சந்தேகம் நமக்குள் எழும்புகின்றது.

புதிய இருக்கைகள், டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் ஆல்டோவில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து அனைத்து விண்டோக்களும் பவர் வசதியுடன் வழங்கப்பட இருக்கின்றது.
ஆகையால் மிகவும் அட்டகாசமான தயாரிப்பாக புதிய ஆல்டோ விற்பனைக்கு வர இருப்பது இப்போதே உறுதியாகியுள்ளது. இந்த காரில் 0.8 லிட்டர், 3 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது

இதுதவிர, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி சீரிஸ் மோட்டார் தேர்விலும் புதிய ஆல்டோ எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 66 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார்களுடன் சேர்த்து நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்க இருக்கின்றது.

இதுமாதிரியான சூப்பரான அம்சங்களுடன் மாருதி ஆல்டோ விற்பனைக்கு வர இருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் விற்பனையாகும் காராக மாருதி சுஸுகி ஆல்டோ இருக்கின்றது.
தெளிவாக கூற வேண்டும் விற்பனைக்கு வந்த இரு தசாப்தங்களில் 40 லட்சம் யூனிட்டுகள் வரை இக்கார் விற்பனையாகியது. இதுமாதிரியான மிக சூப்பரான வரவேற்பை புதிய அவதாரத்தில் உருவாகியிருக்கும் ஆல்டோ பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய ஆல்டோ சாலிட் ஒயிட் (Solid White), சில்கி சில்வர் (Silky Silver), கிராணைட் கிரே (Granite Grey), சைஸ்லிங் ரெட் (Sizzling Red), ஸ்பீடி ப்ளூ (Speedy Blue) மற்றும் எர்த் கோல்ட் (Earth Gold) ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
Image Courtesy: Rahul Nair/Rushlane Spylane
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!
-
மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!