ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆல்டோ கே10 காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பது புதிய வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றை படங்களாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் அதன் பிரபலமான ஆல்டோ காரை புதிய தலைமுறைக்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. ஆல்டோ கே10 என்கிற பெயரில் கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டாலும், புதிய ஆல்டோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.3.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைமுறை ஆல்டோ கே10 கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ரூ.3.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் ஆல்டோ கே10 காரின் எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டின் படங்கள் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் இருந்து வெளியாகியுள்ளன.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

வெறும் ரூ.4 லட்சத்தில் ஒரு கார் கிடைக்கிறது என்றால் அதன் தோற்றமும், அதனுள் வழங்கப்பட்ட அம்சங்களும் எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஆல்டோ கே10 எல்.எக்ஸ்.ஐ காரின் இந்த படங்கள் சிறந்த உதாரணங்கள் ஆகும். குறிப்பாக, முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள வலிமையான பிளாஸ்டிக்கால் ஆன பம்பர் ஆனது காரின் உற்பத்தி செலவை குறைப்பதில் மாருதி சுஸுகி எந்த அளவிற்கு யோசிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

ஏனெனில் விலை அதிகமான ஆல்டோ கே10 வேரியண்ட்களில் காரின் உடல் நிறத்தில் முன்பக்க பம்பர் வழங்கப்படுகிறது. கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் முன் பம்பராக மட்டுமின்றி, அதற்கு மேலே காற்றுத்துளைகள் உடன் க்ரில் அமைப்பாகவும் உள்ளது. சுஸுகி பிராண்டின் லோகோ பிளாஸ்டிக் க்ரில் அமைப்பின் மீதுதான் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

முன்பக்க ஹெட்லேம்ப்கள் பழைய கார்களில் இருப்பதை போல் ஹலோஜன் தரத்தில் உள்ளன. முன்பக்க ஹெட்லேம்ப் அமைப்புடன் டர்ன் இண்டிகேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆனால் டர்ன் இண்டிகேட்டர்கள் கிளாசிக் கார்களில் இருப்பதை போன்று முன் ஃபெண்டரில் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியே காரின் பக்கவாட்டு பகுதிக்கு வந்தோமேயானால், 13-இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதை காணலாம்.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

ஆனால் டயர்களின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது, உயர்நிலை வேரியண்ட்களிலும் இதே அளவிலான டயர்களே பொருத்தப்படுகிறதாம். முன்பக்க க்ரில், பம்பரை போன்று பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளும் காரின் உடல்நிறத்தில் இல்லை. இதனை மேனுவலாக மடக்கி, நீட்டிக் கொள்ளலாம். ஆனால் இந்த கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளும் வசதி வழங்கப்படவில்லை.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

கதவுகளின் கைப்பிடிகளும் காரில் இருந்து தனித்து தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்திலும் பம்பர் கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் அலமாரி எதுவும் இல்லை. அலமாரி இல்லையென்றால் கூட பரவாயில்லை, சஸ்பென்ஷனுக்கு பொருத்தப்படும் உலோக பாகங்கள் காரின் உடல் பேனல்களை தாண்டி வெளியே தெரிகின்றன.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

வெளிப்புறத்தை போல் புதிய ஆல்டோ கே10 எல்.எக்ஸ்.ஐ காரின் உட்புற கேபினை வடிவமைப்பதிலும் மாருதி சுஸுகி மிகவும் சிக்கனமாக நடந்து கொண்டுள்ளது. காரின் உள்ளே பார்க்கலாம் என கதவை திறக்கும்போதே ஜன்னல் கண்ணாடியை கீழிறக்குவதற்கும், மேலேற்றுவதற்கும் அதன் பின்னால் வழங்கப்பட்டுள்ள மேனுவல் லிவர் நமது கண்ணில்பட்டு விடுகிறது. ஏனெனில் இத்தகைய பழைய அம்சங்களை தற்போதைய மாடர்ன் கார்களில் பார்க்க முடிவதில்லை.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

ஆரம்ப நிலை எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் மட்டுமின்றி, புதிய ஆல்டோ கே10 காரின் மற்ற வேரியண்ட்களிலும் எந்த அளவிற்கு உற்பத்தி செலவை குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் குறைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆல்டோ கே10-இன் வி.எக்ஸ்.ஐ+ வேரியண்ட்டில் கூட பின் இருக்கை வரிசையில் ஜன்னல் கண்ணாடிகளை மேனுவலாக கண்ட்ரோல் செய்யும் வசதியே கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சத்தில் மாருதி கார் என்றால் இப்படிதான் இருக்கும்போல!! மொத்தமா பார்த்துட்டு ஒரு முடிவு பண்ணுங்க...

இந்த படங்களில் காட்சித்தரும் ஆல்டோ கே10 எல்.எக்ஸ்.ஐ காரில் ஸ்டேரிங் சக்கரம் மிகவும் எளிமையானதாக கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், இந்த காரில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் ஏசி உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்க முடியாது தானே... இந்த படங்களில் காரில் ஏசி துளைகளையும், ஏசி கண்ட்ரோல் செய்தவற்கு திருகுவானை கூட உங்களால் காண முடியும். ஆனால் ஏசி-ஐ ஆன்/ஆஃப் செய்வதற்கு பொத்தான் எதுவும் இல்லை.

Article Published On: Saturday, September 3, 2022, 13:54 [IST]
English summary
2022 maruti alto k10 standard model specs and features explained
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+