2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

2022 மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான, ஆரம்ப நிலை வேரியண்ட்டை விவரிக்கும் முதல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் மூலம் தெரியவந்துள்ள விலை குறைவான புதிய பலேனோ காரை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வருகிற பிப்.23ஆம் தேதி சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், புதிய பலேனோ காரை பற்றிய செய்திகள் ஏற்கனவே அதிகளவில் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் தற்போது ஜிகே கார்ஸ் என்கிற யுடியூப் சேனலில் 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டின் விலை குறைவான வேரியண்ட்டை பற்றி வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவின் மூலம் அப்டேட் செய்யப்பட்ட இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சில டீலர்ஷிப்களை வந்தடைய துவங்கிவிட்டது என்பதை அறிய முடிகிறது. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே துவங்கிவிட்டன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் புதிய பலேனோவை மாருதி நெக்ஸா இணையத்தள பக்கத்தில் புக் செய்து கொள்ளலாம்.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

வெப்சைட்டில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை கட்டமைத்து கொள்ளலாம் என்கிறது மாருதி சுஸுகி. இன்னும் விலைகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். எக்ஸ்-ஷோரூம் விலைகள் 23ஆம் தேதி தெரியவந்துவிடும். இந்தியாவில் சிக்மா, டெல்டா, ஸெடா மற்றும் ஆல்ஃபா என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் புதிய பலேனோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

மாருதி நெக்ஸா இணைய பக்கத்தில் 2022 பலேனோ ஆரம்ப நிலை சிக்மா வேரியண்ட்டிற்கான அம்சங்கள் மற்றும் வசதிகள் எந்த அளவிற்கு மாற்றியமைத்து கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக மேலுள்ள வீடியோ விளங்குகிறது. உட்புறத்தில் இருந்து ஆரம்பித்தால், இதன் டேஸ்போர்டு ஏகப்பட்ட நிறங்களிலான லேயர்களை கொண்டுள்ளது. நீலம், சில்வர் மற்றும் அடர் நீலம் என மூன்று விதமான நிறங்களில் இதன் டேஸ்போர்டை பெறலாம்.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

நீலம் மற்றும் கருப்பு கலவையில் இருக்கை மற்றும் கதவு ட்ரிம்களை அலங்கரித்து கொள்ளலாம். மற்றப்படி எந்தவொரு ஸ்ட்ரீயோ அமைப்பும் புதிய பலேனோவில் வழங்கப்படவில்லை. இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பானது டேஸ்போர்டில் இருந்து தனித்து வெளியே தெரிவதுபோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய காரில் தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல் இல்லாமல், மேனுவலாகவே க்ளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

இருப்பினும் கதவுகள் அனைத்திலும் பவர் கண்ணாடிகளை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதேபோல் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரமும் கொடுக்கப்படும். இவற்றுடன் ரிமோட் மைய லாக்கிங் மற்றும் டிஜிட்டல் ஓட்டுனர் திரை உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ள்ளிட்டவையும் நிச்சயமாக புதிய பலேனோவில் வழங்கப்படும்.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் மற்றும் அதிவேக எச்சரிப்பான் வழங்கப்படலாம். வெளிப்புறத்தில் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட் புதிய டிசைனில் பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் க்ரோம்-ஆல் சூழப்பட்ட டெயில்லேம்ப்களை பெற்று வரவுள்ளது. இதனால் இண்டிகேட்டர்களின் வடிவமும் மாற்றியமைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

ஆரம்ப நிலை வேரியண்ட் என்பதால், நிறங்கள் இல்லாத இரும்பு சக்கரங்களே வழங்கப்படும். இவற்றின் அளவு 14 இன்ச் என இருக்கலாம். புதிய பலேனோவின் மற்ற வெளிப்புற அம்சங்களாக பின்பக்க வைபர் மற்றும் டீஃபாக்கர், கருப்பு நிற கதவு கைப்பிடிகள், காரின் உடல் நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், மேற்கூரையில் ஸ்பாய்லர் மற்றும் க்ரோம்-ஆல் அலங்கரிக்கப்பட்ட பின்பக்க கதவு உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

புதிய தோற்றம் கொண்ட 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் கே12என் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. பலேனோ சிக்மா வேரியண்ட்டில் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு எதுவும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை.

2022 மாருதி சுஸுகி பலேனோவின் விலை குறைவான வேரியண்ட்டின் தோற்றம் இதுதான்!! முதல் வீடியோ வெளியானது!

2022 பலேனோ காரின் விலையினை மாருதி இன்னும் அறிவிக்கவில்லை. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.6.50 லட்சங்களில் எதிர்பார்க்கிறோம். இந்த விலையில் பலேனோ சிக்மா வேரியண்ட் கிடைக்கும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய பலேனோவிற்கு இப்போதுவரையில் மட்டுமே 16,000 முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, February 19, 2022, 14:41 [IST]
English summary
2022 maruti baleno base sigma variant interior and exterior revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+