இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

2022 பலேனோ காருக்கு இந்தியர்கள் மத்தியில் புக்கிங் இப்பவே குவிய தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

மாருதி சுசுகி நிறுவனம் மிக விரைவில் அதன் புதுப்பிக்கப்பட்ட பலேனோ கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதற்கான தேதியைகூட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. வரும் 23ம் தேதி அன்றே இக்கார் நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

இதன் வருகையை முன்னிட்டு மிக சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இக்காருக்கான புக்கிங் பணிகளை ரூ. 11 என்ற மிகக் குறைந்தபட்ச முன் தொகையில் தொடங்கியது. இப்பணிகள் தொடங்கப்பட்டு ஒரு சில நாட்களே ஆகின்றநிலையில், 2022 பலேனோவிற்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

ஆம், புதுப்பிக்கப்பட்ட பலேனோ காருக்கு கிடைத்திருக்கும் புக்கிங் விபரமே தற்போது வெளி வந்திருக்கின்றது. சுமார் 16 ஆயிரம் யூனிட்டுகளுக்கு இப்போதே புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பலேனோ காரின் விலை பற்றிய தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இத்தகைய மிக சிறப்பான வரவேற்பு அதற்கு கிடைத்திருக்கின்றது.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

நெக்ஸா டீலர்கள் வாயிலாக இக்காருக்கான புக்கிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பலேனோ ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். தற்போது விற்பனையில் இருக்கும் பலேனோவிற்கு இந்தியர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பு மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் 2022 பலேனோவிற்கும் கிடைக்கும் என்பது இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

கணிசமான மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் சேர்ப்புடன் 2022 பலேனோ விற்பனைக்கு இருக்கின்றது. மெல்லிய மற்றும் அகலமான முன் பக்க க்ரில், எல்இடி முன் மற்றும் பின் பக்க மின் விளக்குகள், 16 இன்ச் அளவுள்ள மெஷின்ட் அலாய் வீல்கள் ஆகியவை காரை அலங்கரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

புதிய நிற தேர்வாக ஒபுலெண்ட் ரெட் (Opulent Red), லக்ஸே பீஜ் (Luxe Beige), ஸ்பிளெண்டிட் சில்வர் (Splendid Silver), நெக்ஸா ப்ளூ (Nexa Blue), பியர்ல் ஆர்க்டிக் ஒயிட் (Pearl Arctic White) மற்றும் கிராண்டியர் கிரே (Grandeur Grey) ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

இதேபோல் காரின் உட்புறத்திலும் சில சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய இரட்டை நிற டேஷ்போர்டு, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட தட்டையான ஸ்டியரிங் வீல், புதிய டிஎஃப்டி எம்ஐடி யூனிட், 9 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

இவைமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருக்கின்றது. இதுவரை இந்த செக்மெண்டில் மாருதி வழங்காத ஒரு சில அம்சங்கள் கூட 2022 பலேனோவில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி வசதிக் கொண்ட பார்க்கிங் கேமிரா, ஒயர்லெஸ் ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஒயர்லெஸ் சார்ஜர், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், யுவி கட் கிளாஸஸ், 60:40 ஸ்பிளிட் ரியர் இருக்கைகள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் டிரைவர் இருக்கைகள் மற்றும் டில்ட் - டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்டபிள் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் 2022 பலேனோவில் வழங்கப்பட இருக்கின்றன.

இப்பவே இவ்ளோ புக்கிங்கை அள்ளிடுச்சா... 2022 பலேனோவிற்கு இமாலய அளவில் குவியும் புக்கிங்!

மேலும், 2022 பலேனோ காரை மாருதி சுசுகி நிறுவனம் அதிக பாதுகாப்பான காராக மாற்றும் வகையில் சில சிறப்பு வசதிகளையும் வழங்கியிருக்கின்றது. சைடு மற்றும் திரை போன்ற ஏர்-பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் பிரேக் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சிறுவர்களுக்கான ஐசேஃபிக்ஸ் மவுண்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Source: TOI

Article Published On: Friday, February 18, 2022, 14:18 [IST]
English summary
2022 maruti baleno receives 16000 prepre launch bookings
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+