தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்..

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 2022 மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் தென்னாப்பிரிக்க சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

மிக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில், இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் டிசைன், வசதிகள் மற்றும் பாதுகாப்பு என அனைத்து பிரிவுகளிலும் அப்டேட்டை பெற்று வந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலேயே புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது 2022 பலேனோ தென்னாப்பிரிக்காவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் விற்பனையை துவங்கவுள்ள புதிய பலேனோ கார்கள் இந்தியாவில், குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, உலகின் எந்த நாட்டில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை மேட் இன் இந்தியா கார்களாகவே அந்த நாட்டில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்காகவே ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான சுஸுகி & டொயோட்டா கூட்டணியில் உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதே பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் தான் தென்னாப்பிரிக்க நாட்டு சந்தையிலும் களமிறக்கப்பட்டுள்ளது. புதிய பலேனோ காரில் மிக முக்கிய அப்டேட்கள் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. இருப்பக்கங்களிலும் புதிய L-வடிவிலான ஹெட்லேம்ப்களை கொண்ட அளவில் பெரிய மற்றும் அகலமான க்ரில் உடன் மாருதி சுஸுகி பலேனோ காரின் முன்பக்கம் தற்போது முற்றிலும் புத்துணர்ச்சியானதாக காட்சியளிக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

ஹெட்லேம்ப் அமைப்பினுள் புதிய எல்இடி பல்ப்கள் மற்றும் புதிய டிஆர்எல்-கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. முன்பக்க பம்பர் முன்பை காட்டிலும் கூர்மையானதாக, அகலமான ஏர் டேம் மற்றும் ஃபாக் விளக்குகளுக்கு புதிய குழிகளை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் பம்பருக்கு கீழே கருப்பு நிற பேனல்கள் வழங்கப்பட்டுள்ளதால், புதிய பலேனோவின் முன்பக்கம் ஸ்போர்டியானதாக மெருகேறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

அதேபோல் பின்பக்கத்தில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் L-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள், புதிய பின்பக்க பம்பர் மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பின்கதவு உள்ளிட்டவற்றை காணலாம். பக்கவாட்டில் எந்த அப்டேட்டும் இல்லை என நினைத்துவிட வேண்டாம். புதிய பலேனோவின் பக்கவாட்டில் ஜன்னல் சில்களை சுற்றிலும் க்ரோம் லைன் வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

இந்த க்ரோம் லைன் காரின் கடைசி குவாட்டர்-பகுதிக்கு மேலாக இறுதியாக சென்று முடிவடைகிறது. அத்துடன் எல்இடி டெயில்லேம்ப்களின் வடிவம் மாற்றப்பட்டுள்ளதால், இதற்கேற்ப பின் கதவுகள் மற்றும் ஃபெண்டர்கள் புதுமையான வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திற்கு ஏற்ப புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறத்திலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

இதில் முக்கியமானதாக டேஸ்போர்டின் புதிய டிசைனை சொல்லலாம். புதிய தலைமுறை மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் பிரீமியம் எஸ்யூவி காரில் வழங்கப்படுவதை போல் 2022 பலேனோவின் டேஸ்போர்டில் 9.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆடியோ கண்ட்ரோல் மற்றும் ஏசி கண்ட்ரோலிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

இவற்றுடன் ஓட்டுனரின் தலைக்கு நேரெதிரான திரையும் புதிய பலேனோவில் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழக்கம்போல் செமி-டிஜிட்டலாக தொடரப்பட்டாலும், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கும் திரை வண்ண நிறங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், தட்டையான-தாழ்வான, பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரத்தையும் ஸ்விஃப்ட் & டிசைர் கார்களில் இருந்து பலேனோ பெற்று வந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்...

மற்ற குறிப்பிடத்தக்க சேர்ப்புகள் என்று பார்த்தால், வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இவை அனைத்தும் அப்படியே இந்தியாவில் வழங்கப்படுவை தான் என்றாலும், தென்னாப்பிரிக்க 2022 பலேனோவில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சற்று அதிகமாக, 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகியுள்ள நம்மூர் மாருதி கார்... 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!! ஆற்றல்மிக்க என்ஜினுடன்..

இதே பெட்ரோல் என்ஜின் தான் இந்தியாவில் மாருதி சுஸுகி எர்டிகா, சியாஸ், பிரெஸ்ஸா கார்களில் வழங்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் வருகிற 2022 ஜனவரியில் விற்பனையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 27, 2022, 11:30 [IST]
English summary
2022 maruti baleno to launch in export market with 1 5 litre engine details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+