6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

ஒரு காலத்தில் புதிய கார் வாங்கும்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதன் மைலேஜையும், விலையையுமே தீவிரமாக ஆராய்ந்து பார்ப்பர். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றை ஆராய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றாலும், அதேநேரம் கார்களின் பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்களை பார்ப்பவர்களும் அதிகரிக்க துவங்கியுள்ளனர்.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

இதனை வெளிப்படுத்தும் வகையில், 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பதிவுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம். மாருதி பலேனோவின் இரண்டாம் தலைமுறையான புதிய மாடலினை இதுவரையில் மட்டுமே 50,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக சமீபத்தில் நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

இதில் பாதிக்கும் மேல், கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் புதிய பலேனோவின் டாப் வேரியண்ட்களான ஸீட்டா & ஆல்பா வேரியண்ட்களை தேர்வு செய்துள்ளனர். இவை இரண்டில் மட்டுமே விபத்தின்போது பயணிகளின் பாதுகாப்பிற்கு மொத்தம் 6 காற்றுப்பைகள் வழங்கப்படுகின்றன. முன்பக்கத்தில், பக்கவாட்டில் என இவை அனைத்தும் முன் இருக்கை பயணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

இந்திய பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் 6 காற்றுப்பைகளை முதலாவதாக பெற்ற மாடல் ஹூண்டாய் ஐ20 ஆகும். 2020ஆம் ஆண்டின் இறுதியில் புதிய தலைமுறை ஐ20 கார் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மாருதி பலேனோ இந்த அம்சத்தை பெற்றுள்ளது. மேலும் இதன்படி, பலேனோவின் ரீபேட்ஜ்டு வெர்சனாக விளங்கும் டொயோட்டா க்ளான்ஸாவும் 6 காற்றுப்பைகளை பெற்று அறிமுகமாகி உள்ளது.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

2022 பலேனோ ஹேட்ச்பேக் கார் சிக்மா, டெல்டா ஸீட்டா & ஆல்ஃபா என்கிற 4 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் இரு வேரியண்ட்களான சிக்மா & டெல்டாவில் முன் இருக்கை பயணிகளுக்கு வெறும் 2 காற்றுப்பைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் பயணிகள் கார்கள் அனைத்திலும் 6 காற்றுப்பைகளை கட்டாயமாக்குவதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

ஆகையால், இன்னும் சில ஆண்டுகளில் மாருதி பலேனோ உள்பட அனைத்து விதமான கார்களிலும் குறைந்தப்பட்சம் 6 காற்றுப்பைகளை எதிர்பார்க்கலாம். எங்களை கேட்டால், பலேனோ போன்ற பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார்களில் 6 காற்றுப்பைகளை அனைத்து வேரியண்ட்களிலும் வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களின் எண்ணோட்டமும் அவ்வாறுதான் உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் இன்னமும் மாருதி சுஸுகி சற்று பின்னோக்கியே யோசித்து வருகிறது.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

சற்று விலைமிக்க பலேனோவிலேயே இந்த நிலை என்றால், மலிவான வேகன்ஆர், ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ போன்ற கார்களில் 6 காற்றுப்பைகளை அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான பாதுகாப்பு அம்சமாக மாருதி சுஸுகி வழங்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் மற்ற பிராண்ட்கள் ADAS, செயற்கை நுண்ணறிவு என அப்டேட்டாகி கொண்டே செல்கின்றன. உதாரணத்திற்கு, எம்ஜி மோட்டார்.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

2022 பலேனோவில் ஸ்டாண்டர்ட்டான வசதிகளாக மடக்கக்கூடிய கண்ணாடிகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் ஸீட்டா வேரியண்ட்டில் இருந்து கூடுதலாக 360-கோண கேமிரா (பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவிலேயே முதல் மாடலாக), ஹெட்-அப் திரை, க்ரூஸ் கண்ட்ரோல், தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி முதலியவற்றை மாருதி வழங்குகிறது.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

அதேபோல் டெல்டா வேரியண்ட்டில் இருந்து ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கிடைக்கும். புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரிலும் அதே 1.2 லிட்டர், 4-சிலிண்டர் ட்யுல்ஜெட் கே12என் பெட்ரோல் என்ஜினே தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 90 எச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

இருப்பினும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் தற்போதுவரையில் மொத்த முன்பதிவுகளில் வெறும் 20 சதவீதத்தினர் மட்டுமே 2022 பலேனோ காரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் நம்பர்.1 கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகியின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றான பலேனோவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு அறிமுக நாளிலேயே சுமார் 25,000 முன்பதிவுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

6 ஏர்பேக்குகள் உடன் 2022 மாருதி பலேனோ காரை வாங்குறவங்கதான் அதிகமாம்!! மாறிவரும் கஸ்டமர்ஸின் இரசனை!

முந்தைய பலேனோ மாடல் சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 15,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனை காட்டிலும் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார்களை அதிக எண்ணிக்கைகளில் விற்பனை செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. ஏனெனில் புதிய பலேனோ காரின் வடிவமைப்பு & தயாரிப்பு பணிகளில் மட்டுமே சுமார் ரூ.1,150 கோ

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2022, 7:30 [IST]
English summary
2022 maruti baleno with 6 airbags grabs 60 percent of bookings
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+