புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

நடப்பு 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்படும் மாருதி சியாஸ் கார்களுக்கான நிறத்தேர்வுகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் சியாஸின் நிறத்தேர்வுகளின் லிஸ்ட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் மற்றும் செலிரியோ கார்களை தவிர்த்து, கடந்த சில வருடங்களில் மாருதி சுஸுகியில் இருந்து பெரியதாக எந்தவொரு அறிமுகமும் இல்லை. விரைவில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரும், சில மாதங்களில் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில் தான் தற்போது மை2022 சியாஸ் காருக்கு வழங்கப்படும் பெயிண்ட் தேர்வுகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

இந்த வகையில் தற்போது இந்த நடுத்தர-அளவு செடான் காருக்கு செலஸ்டியல் நீலம், உமிழும் நெருப்பின் சிவப்பு, ஸ்ப்லெண்டிட் சில்வர் மற்றும் கிராண்டியுர் க்ரே என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய நிறங்களில் சியாஸ் காரின் தோற்றத்தினை காண மாருதி சுஸுகி பிராண்டின் நெக்ஸா டீலர்ஷிப் மையங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தினை அணுகலாம்.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

இதே 4 நான்கு நிறத்தேர்வுகளே மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரிலும் கொடுக்கப்பட உள்ளதாக சமீபத்தில் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். இவற்றுடன் பேர்ல் ஆர்டிக் வெள்ளை, மிட்நைட் கருப்பு மற்றும் பிரைம் பிரவுன் என்கிற வழக்கமான நிறத்தேர்வுகளிலும் சியாஸ் செடான் கார் தொடர்ந்து கிடைக்கிறது.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

புதிய 4 நிறத்தேர்வுகளின் வருகையினால், இதற்குமுன் வழங்கப்பட்டுவந்த சங்ரியா சிவப்பு, நெக்ஸா நீலம் மற்றும் மேக்மா க்ரே உள்ளிட்ட நிறத்தேர்வுகள் நீக்கப்பட்டுள்ளன. பெயிண்ட் தேர்வுகளில் இத்தகைய மாற்றங்களை தவிர்த்து மாருதி சுஸுகி சியாஸ் செடான் காரின் வெளிப்பக்க தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2022 சியாஸ் காரின் உட்புறத்தில் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

இது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடியதாக உள்ளது. இத்துடன் தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றையும் உட்புறத்தில் பெறும் இந்த பிரீமியம் செடான் காரின் வெளிப்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்படுகின்றன. சியாஸில் தற்போதைக்கு 1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜினை மட்டுமே மாருதி சுஸுகி வழங்கி வருகிறது.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

அதிகப்பட்சமாக 104 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. சமீபத்தில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்கள் வெளியாகி இருந்ததாக முன்னதாக கூறியிருந்தோம். இந்த விபரங்களின் மூலம் புதிய பலேனோ காருக்கு வழங்கப்பட உள்ள புதிய நிறத்தேர்வுகள் மட்டுமின்றி, அதற்கு நிர்ணயிக்கப்பட உள்ள வேரியண்ட்கள் குறித்த தகவலும் நமக்கு கிடைத்திருந்தது.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

இதன்படி, மாருதி சுஸுகியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக விளங்கும் பலேனோ அதன் புதிய அவதாரத்தில் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்ஃபா என்கிற 4 வேரியண்ட்களில், "நியூ ஏஜ் பலேனோ" என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வில் விற்பனை செய்யப்பட உள்ள பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரையும் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கொண்டுவர மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுக்கு ஏஎம்டி வழங்கப்படுமா அல்லது சிவிடி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. மலிவான ஏஎம்டி வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் ரூ.11,000 என்கிற டோக்கன் தொகையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. மை2022 சியாஸ் கார்களின் வெளிப்புற தோற்றம் பெரியதாக மாற்றப்படவில்லை என்றாலும், புதிய பலேனோ முற்றிலும் புதிய முன் & பின்பக்கங்களுடன் கொண்டுவரப்பட உள்ளது.

புதியதாக 4 நிறத்தேர்வுகளுடன் மாருதி சுஸுகி சியாஸ் செடான்- 2022இல் தயாரிக்கப்படும் யூனிட்களுக்கு மட்டும் தானாம்

இந்த வகையில் சற்று அகலமான முன்பக்க ஏர்டேம், புதிய பம்பரின் இரு முனைகளிலும் புதுமையான குழியில் ஃபாக் விளக்குகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் சற்று பின்னோக்கி வளைக்கப்பட்ட பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டில் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன் பலேனோவின் முன்பக்க பொனெட்டின் வடிவமும் திருத்தியமைக்கப்பட உள்ளன. அதேபோல் பின்பக்கத்திலும் புதிய கதவு மற்றும் கூர்மையான வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 9, 2022, 15:32 [IST]
English summary
Maruti Ciaz New Color Option.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+