2022 மாருதி சுசுகி பலேனோ அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே இந்த பிரீமியம் காரை புக் பண்ண ஆசப்படுவீங்க!
2022 மாருதி சுசுகி பலேனோ (2022 Maruti Suzuki Baleno) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுசுகி நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான பலேனோவின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் இப்புதிய வெர்ஷன் பன்மடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் பன்முக சிறப்பு வசதிகளை புதுப்பித்தலின் வாயிலாக மாருதி சுசுகி இக்காரில் வாரி வழங்கியிருக்கின்றது. ஆகையால், ஏற்கனவே பிரீமியம் தர அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் கார் பிரிவில் மிக சிறப்பான தேர்வாக காட்சியளித்து வந்த பலேனோ, தற்போது இன்னும் பன் மடங்கு சிறப்பான பிரீமியம் காராக மாறியுள்ளது.

இக்காருக்கு ஏற்கனவே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. இது ஓர் பிரீமியம் தர கார் என்பதால் நெக்ஸா விற்பனையாளர்கள் வாயிலாக 2022 பலேனோவிற்கான புக்கிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் முன்பதிவுகள் மிக சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.

இது மிகக் குறைவான முன் தொகை ஆகும். 2022 பலேனோவிற்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. பிப்ரவரி 18ம் தேதி நிலவரப்படி இக்கார் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை அள்ளியது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 6.35 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். வேரியண்ட் வாரியான விலை விபரத்தைக் கீழே பார்க்கலாம்.
| Baleno | Manual | AGS |
| Sigma | ₹6,35,000 | |
| Delta | ₹7,19,000 | ₹7,69,000 |
| Zeta | ₹8,09,000 | ₹8,59,000 |
| Alpha | ₹8,99,000 | ₹9,49,000 |

ஏற்கனவே கூறியதை போல் 2022 பலேனோவில் பன்முக சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பிரீமியம் ஹேட்ச்பேக்கின் கவர்ச்சியான தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் மெல்லிய மற்றும் அகலமான முன் பக்க க்ரில், எல்இடி தர முன் மற்றும் பின் பக்க மின் விளக்குகள், 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், எல்இடி தர டிஆர்எல்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய ட்யூவல் டோன் (இரட்டை நிற) டேஷ்போர்டு, பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள் கொண்ட தட்டையான ஸ்டியரிங் வீல், 9 இன்ச் அளவுள்ள எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (இதில் கூடுதல் சிறப்பு வசதியாக ஸ்மார்ட்-ப்ளே ப்ரோ-ப்ள் கார் இணைப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது), புதிய ஆர்கமேஸ் (ARKAMAYS) சவுண்ட் சிஸ்டம், டிஎஃப்டி எம்ஐடி யூனிட் மற்றும் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, இதற்கு முன்பு மாருதி சுசுகி நிறுவனம் இந்த செக்மெண்டிலேயே வழங்கப்படாத சில அம்சங்களையும் 2022 பலேனோவில் வழங்கியிருக்கின்றது. ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறனை வழங்கும் பார்க்கிங் கேமிரா, ஒயர்லெஸ் ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஒயர்லெஸ் சார்ஜர், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், யுவி கட் கண்ணாடிகள், 60:40 ஸ்பிளிட் ரியர் இருக்கைகள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் டிரைவர் இருக்கைகள் மற்றும் டில்ட்-டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை 2022 பலேனோவில் வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமில்லைங்க 2022 பலேனோ காரை மாருதி மிக அதிக பாதுகாப்பான காராகவும் உருவாக்கியிருக்கின்றது. தற்போது மிக உறுதியான பாடி பேனல்களைக் கொண்டு இக்காரை மாருதி கட்டமைத்திருக்கின்றது. தற்போது நாட்டில் அதிக பாதுகாப்பான கார்களின் வருகை அதிகரித்திருப்பதால், அந்த போட்டியைச் சமாளிக்கும் பொருட்டு இந்த யுக்தியை 2022 பலேனோவில் மாருதி கையாண்டிருக்கின்றது.

இதுதவிர, பக்கவாட்டு பகுதியில் திரை போன்ற அமைப்புடைய ஏர்-பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சிறுவர்களுக்கான ஐசேஃபிக்ஸ் மவுண்ட் இருக்கைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் 2022 பலேனோவில் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், புதிய நிற தேர்வாக ஒபுலெண்ட் ரெட் (Opulent Red), லக்ஸே பீஜ் (Luxe Beige), ஸ்பிளெண்டிட் சில்வர் (Splendid Silver), நெக்ஸா ப்ளூ (Nexa Blue), பியர்ல் ஆர்க்டிக் ஒயிட் (Pearl Arctic White) மற்றும் கிராண்டியர் கிரே (Grandeur Grey) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றால், பன் மடங்கு கவர்ச்சியான தேர்வாக 2022 பலேனோ மாறியிருக்கின்றது.

எஞ்ஜினை பொருத்தவரை மாருதி சுசுகி பலேனோ காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி மோட்டார் ஆகும். இந்த மோட்டாருடன் சேர்த்து ஐடில் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்க உதவும். இத்துடன், ஏஎம்டி அல்லது எம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications