5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியும் இப்படி ஒரு நிலைமையா... பாதுகாப்பான டாடா காரை சுக்குநூறாக நொறுக்கிய மாருதி கார்!
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய டாடா காரை, மாருதி சுஸுகி கார் பந்தாடியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்கள் இதனை நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன. 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு தற்போதே 1.06 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணமாக, இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் முதலிடத்தில் இருந்த டாடா நெக்ஸான் (Tata Nexon) காரை பின்னுக்கு தள்ளி விட்டு தற்போது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா முதலிடத்தை தன்வசப்படுத்தி அதிரடி காட்டியுள்ளது.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 15,193 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 108 யூனிட்கள் வித்தியாசத்தில் டாடா நெக்ஸான் காரை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா வீழ்த்தியுள்ளது. அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 15,085 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் என்ற அளவில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக பார்த்தாலும், இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா தனதாக்கியுள்ளது. இத்தனைக்கு 18 சதவீதம் என்ற சிறப்பான வளர்ச்சியுடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இந்த பெருமையை பெற்றுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 12,906 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நாங்கள் ஏற்கனவே கூறியபடி நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 15,193 ஆக உயர்ந்துள்ளது. 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு மட்டுமல்லாது, 2022 மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (2022 Maruti Suzuki Grand Vitara) காருக்கும் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா காரை ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. தற்போது இந்த புதிய காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாத நிலையிலேயே, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

அதாவது விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பாகவே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை இவ்வளவு பேர் முன்பதிவு செய்துள்ளனர். மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் க்ராண்ட் விட்டாரா காரின் விலையை அறிவிக்கவுள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அனேகமாக நடப்பு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் க்ராண்ட் விட்டாரா காரை முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு வந்துள்ள மொத்த முன்பதிவுகளில் சுமார் 45 சதவீத முன்பதிவுகள், இந்த காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு கிடைத்துள்ளன.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது முன்பதிவு தொடர்பான புள்ளி விபரங்கள் மூலமாக நமக்கு தெரியவந்துள்ளது. 2022 பிரெஸ்ஸா மற்றும் க்ராண்ட் விட்டாரா ஆகிய கார்களின் மூலம் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இழந்த செல்வாக்கை மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








