சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

இந்தியாவின் சிஎன்ஜி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் முதன்மையாக திகழ்கிறது. அரேனா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் சிஎன்ஜி தேர்வை வழங்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தனது ஒட்டுமொத்த கார் விற்பனையில், சிஎன்ஜி மாடல்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் இருக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

தற்போதைய நிலையில் தனது பிரபலமான கார்களான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஈக்கோ, செலிரியோ மற்றும் எர்டிகா உள்ளிட்ட கார்களில் மாருதி சுஸுகி நிறுவனம் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் சிஎன்ஜி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

ஏற்கனவே விரிவாக உள்ள தனது சிஎன்ஜி லைன்-அப்பை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது மேலும் விரிவாக்கியுள்ளது. ஆம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி (2022 Maruti Suzuki Dzire CNG) கார் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். விஎக்ஸ்ஐ மற்றும் இஸட்எக்ஸ்ஐ வேரியண்ட்களில் 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி கார் கிடைக்கும்.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி கார், 8.14 லட்ச ரூபாய் முதல் 8.82 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கும். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். 2022 டிசையர் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சிறப்பான மைலேஜ் என்பதில் சந்தேகம் இல்லை.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

டிசைன் மற்றும் வசதிகள் ஆகியவற்றை பொறுத்தவரையில், பெட்ரோல் மாடலை போன்றேதான் 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி காரும் உள்ளது. இதன்படி விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில், மல்டி ஃபங்ஷன் கண்ட்ரோல்கள் உடன் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில், டில்ட் அட்ஜெஸ்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

மேலும் ட்யூயல் டோன் ஃபேப்ரிக் இன்டீரியர், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 DIN மியூசிக் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், ரியர் ஏசி வெண்ட்கள் ஆகியவற்றையும் இது பெற்றுள்ளது. அதே சமயம் இஸட்எக்ஸ்ஐ வேரியண்ட்டிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

இதில், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவை முக்கியமானவை. இதுதவிர ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் இது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

பாதுகாப்பை பொறுத்தவரை, இந்த 2 வேரியண்ட்களிலும், ட்யூயல் ஏர்பேக்குகள், ஹை ஸ்பீடு அலர்ட், டிரைவர் மற்றும் கோ-பாசஞ்சருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் ட்யூயல் ஜெட், 4 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 ஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் சிஎன்ஜி முறையில் இந்த பவர் அவுட்புட் 77 ஹெச்பி மற்றும் 98.5 என்எம் ஆக குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வை மட்டுமே பெற்றுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்களில் வழங்கப்படும் ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வை இது பெறவில்லை.

சூப்பரான விலை... மாருதி டிசையர் சிஎன்ஜி கார் அறிமுகம்... மைலேஜ் எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே புக் பண்ணீருவீங்க!

இந்தியாவின் காம்பேக்ட் செடான் செக்மெண்ட்டில், ஹூண்டாய் அவ்ரா சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய கார்களுடன் 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி போட்டியிடும். பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள சூழலில், இந்த பிரச்னைக்கு 2022 மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 8, 2022, 16:04 [IST]
English summary
2022 maruti suzuki dzire cng launched in india here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+