மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2022 மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2022 வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி (2022 Maruti Suzuki Wagon R Facelift) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 5.39 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.10 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி வேகன் ஆர் திகழ்கிறது.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. வர்த்தக ரீதியிலான விளம்பரம் எடுக்கப்பட்டபோது 2022 மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில் கேமராவின் கண்களில் சிக்கியிருந்தது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதை இது உணர்த்தியது.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எதிர்பார்க்கப்பட்டதை போலவே, புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தவரை இந்த புதிய மாடலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது. இது இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்த்துள்ளது.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2022 மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், 1.0 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 1.2 லிட்டர் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரின் 1.0 லிட்டர் இன்ஜினுடன், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட எஸ்-சிஎன்ஜி (S-CNG) வெர்ஷனும் வழங்கப்படுகிறது.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மாருதி சுஸுகி வேகன் ஆர் எஸ்-சிஎன்ஜி மாடலின் விலை 6.81 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். புதிய வேகன் ஆர் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் ஐஎஸ்எஸ் (ISS - Idle Start/Stop) வசதியும், ஏஜிஎஸ் வேரியண்ட்களில் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மேலும் ஸ்மார்ட்போன் நேவிகேஷன் உடன் 17.78 செமீ (7 இன்ச்) ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ வசதியையும் புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் பெற்றுள்ளது. அத்துடன் 4 ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு நிற மேற்கூரையுடன் கேலண்ட் ரெட் மற்றும் கருப்பு நிற மேற்கூரையுடன் மெக்மா க்ரே ஆகிய 2 ட்யூயல் டோன் வண்ண தேர்வுகளிலும் புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் கிடைக்கும்.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள தனது பிரபலமான கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இதற்கு ஒரு உதாரணம். 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த காருக்கு முன்பதிவுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வேகன் ஆர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கு இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வந்தது. மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார், சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டபோது, பல முறை கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. ஆனால் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் உருவாக்க பணிகளை மாருதி சுஸுகி தற்போது மேற்கொள்கிறதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மாஸ் காட்டும் மாருதி... வேகன் ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டு மனதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Article Published On: Friday, February 25, 2022, 22:56 [IST]
English summary
2022 maruti suzuki wagon r facelift launched in india here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+