2022 எக்ஸ்.எல்6 எம்பிவி காருக்கு முன்பதிவுகள் துவக்கம்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மாருதி சுஸுகி
2022 மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் தொடர்பான புதியதொரு டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மேம்படுத்தப்பட்ட ஆற்றல்-வழங்கி மற்றும் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் எர்டிகா எம்பிவி காரை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்திருந்தது. அதனை தொடர்ந்து, எர்டிகாவின் பிரீமியம் வெர்சனான எக்ஸ்.எல்6 எம்பிவி மாடலும் விரைவில் அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையிலான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறவுள்ளது.

2022 மாருதி எக்ஸ்.எல்6 காரின் அறிமுகம் இன்னும் சில தினங்களிலும், ஷோரூம்களுக்கு இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் வந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்களின் யுடியூப் பக்கத்தில் புதிய எக்ஸ்.எல்6 ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதை தெரிவிக்கும் விதத்திலான டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.
வெறும் 15 வினாடிகளில் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவிலும் எக்ஸ்.எல்6 காரில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள டிரான்ஸ்மிஷன் அமைப்பு ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதியாக, புத்தம் புதிய எக்ஸ்.எல்6 காருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்.எல்6-க்கு வழங்கப்படும் அப்டேட்கள் பெரும்பான்மையாக 2022 எர்டிகாவையே ஒத்து காணப்படும். இதன்படி திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் சற்று மாற்றப்பட்ட முன்பக்க & பின்பக்க பம்பர்களை 2022 எக்ஸ்.எல் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவர உள்ளது. இருப்பினும் புதிய எக்ஸ்.எல்6 காரில் கூடுதலாக புத்துணர்ச்சியான டிசைனில் 16-இன்ச் அலாய் சக்கரங்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த அலாய் சக்கர அப்டேட் உண்மையில் முந்தைய தலைமுறை மாடலில் இருந்து புதிய எக்ஸ்.எல்6 -இன் கட்டமைப்பை வேறுப்படுத்தி காட்டும். ஸீட்டா & ஆல்ஃபா என்கிற இரு விதமான ட்ரிம் நிலைகளில் புதிய எக்ஸ்.எல்6 விற்பனை செய்யப்பட உள்ளது. அத்துடன் புதிய ஆல்ஃபா ப்ளஸ் ட்ரிம் நிலையையும் இந்த 6-இருக்கை எம்பிவி கார் விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் நிலையில் நிலைநிறுத்தப்பட உள்ளதால், இந்த புதிய வேரியண்ட் நிச்சயமாக ஆல்ஃபா வேரியண்ட்டை காட்டிலும் கூடுதலாக சில வசதிகளை கொண்டிருக்கும். புதியதாக வேரியண்ட்டை பெற்றாலும் எக்ஸ்.எல்6-ஐ காட்டிலும் எர்டிகாவில்தான் அதிக வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆர்டிக் வெள்ளை, ஸ்பிளெண்டிட் சில்வர், கிராண்டியூர் க்ரே, பிரேவ் காக்கி, உமிழும் நெருப்பின் சிவப்பு மற்றும் செலெஸ்டியல் நீலம் என 6 விதமான நிறத்தேர்வுகளில் எக்ஸ்.எல்6 ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

இவை அனைத்தும் சிங்கிள்-டோன் பெயிண்ட் தேர்வுகளாகும். டபுள்-டோன் பெயிண்ட் தேர்வில் கருப்பு நிற மேற்கூரை உடன் சிவப்பு, சில்வர் மற்றும் காக்கி உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுக்கக்கூடியதாக வழங்கப்படும். இந்த டபுள்-டோன் நிறத்தேர்வுகள் எக்ஸ்.எல்6 காரின் டாப் ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்டில் மட்டுமே கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய எக்ஸ்.எல்6-இன் உட்புற டேஸ்போர்டில் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ உடன் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை மாருதி சுஸுகி வழங்கவுள்ளது.

இத்துடன் மேற்கூரையில் ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் 4 காற்றுப்பைகள் உள்ளிட்டவை 2022 எக்ஸ்.எல்6 ஃபேஸ்லிஃப்ட் காரில் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக வழங்கப்படும். அதேநேரம் மத்திய-நிலை ஆல்ஃபா ட்ரிம் நிலையில் கூடுதலாக பிராண்டின் தகவல்தொடர்பு தொழிற்நுட்பங்களுடன் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ அமைப்பை எதிர்பார்க்கிறோம்.

இதனை காட்டிலும் விலைமிக்கதாக கொண்டுவரப்பட உள்ள ஆல்பா ப்ளஸ் ட்ரிம் நிலையில் காற்றோட்டமான இருக்கைகள், டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு, 360-கோண கேமிரா, அகச்சிவப்பு எதிரொலிப்பு (IR) மற்றும் புறஊதா கதிர் எதிர்ப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட உள்ளன. இவை தவிர்த்து அனைத்து ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களிலும் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்பக்கமாக பெடல் ஷிஃப்டர்கள் கொடுக்கப்பட உள்ளன.

மாருதி எக்ஸ்.எல்6 ஃபேஸ்லிஃப்ட் காரில் 2022 எர்டிகாவில் வழங்கப்பட்டுள்ள அதே புதிய கே15சி 1.5 லிட்டர் இரட்டை-ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதனுடன் வழக்கமான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், புதிய 6-ஸ்பீடு டார்க் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இதில் புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் பெடல் ஷிஃப்டர்கள் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








